ஹோட்டலில் இருந்து நடிகை அஞ்சலி எங்கே தான் சென்றார்?..


avatar

ஹோட்டலில் இருந்து நடிகை அஞ்சலி எங்கே தான் சென்றார்?.. 10-anj13
ஹைதராபாத்:
நடிகை அஞ்சலி காரில் கடத்தப்பட்டதாக அவரது அண்ணன் ஒரு புகார் கொடுத்துள்ளார். நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் மீது பரபரப்பு புகார் கூறினார். சொத்து, பணத்தை சித்தி பாரதிதேவி அபகரித்து விட்டதாகவும் அவருக்கு உடந்தையாக டைரக்டர் களஞ்சியம் இருக்கிறார் என்றும் கூறினார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும், ஹைதராபாத்தில் குடியேறி விட்டேன் என்றும் தெரிவித்தார்.

டைரக்டர் களஞ்சியம் இதனை மறுத்தார்.
அஞ்சலி பணத்தை அபகரித்ததாக சொல்வது பச்சை பொய். அவரது சொந்த விஷயங்களில் நான் தலையிட வில்லை என்றார். தன் மீது அவதூறு பரப்பிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதற்கிடையில் நடிகை அஞ்சலியை காணவில்லை என்று அவரது அண்ணன் ரவி சங்கர் ஆந்திர மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை துவங்கினர்.

தேடித்தேடி ஓய்கிறது போலீஸ்...
ஹைதராபாத் மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஹோட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். அறையில் அஞ்சலி இல்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும் அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஹோட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. அஞ்சலி ஓட்டம்... மறுநாள் திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஹோட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன. தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார். செல்போனில் பேசிய படியே வெளியே சென்றாராம்.

காரில் சென்றார்...
ஹோட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்குள் அஞ்சலி ஏறிக்கொண்டார். காரின் பின் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவரது முழு உருவமும் கேமராவில் தெளிவாக தெரியவில்லை.

மின்னலாய் மறைந்த கார்...
பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது. கார் நம்பர் கேமராவில் பதிவாகவில்லை. ஏற்கனவே இரண்டு தடவை காதல் வயப்பட்டு அஞ்சலி வீட்டை விட்டு ஓடியதாகவும் அதை தடுத்து விட்டதாகவும் அவரது சித்தி பாரதிதேவி கூறியுள்ளார். எனவே எவரையேனும் காதலித்து அவருடன் ஓடிவிட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னையிலும் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் வருகிறார்கள்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!