பல காதலர்களுடன் பல முறை ஓடிப் போனவர் அஞ்சலி: சித்தி பாரதி தேவி


avatar

சென்னை: அஞ்சலி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை காதலித்து அவர்களுடன் வீட்டை விட்டு ஓடிப் போனவர் என்று அவரது சித்தி பாரதி தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய சித்தி பாரதி தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் அஞ்சலியின் சித்தி என்பது உண்மையே. அவள் என் அக்கா பார்வதி தேவியின் மகள். என் அக்கா ஆந்திராவில் உள்ள ஜெகன்பேட்டையில் வசித்து வருகிறார். ஒரு ஆண் குழந்தை மற்றும் அஞ்சலியை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்ட என் அக்காவை விட்டுவிட்டு அவரது கணவர் ஓடிவிட்டார். இதையடுத்து என் அக்கா இரண்டாவது முறையாக திருமணம் செய்து 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகளை பெற்றார்.


இந்நிலையில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த அஞ்சலி ஸ்ரீராம் என்ற பையனை காதலித்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள். ஒரு மாதம் கழித்து தான் அவளை கண்டுபிடிக்க முடிந்தது. சென்னையில் வசித்த நான் ஜெகன்பேட்டைக்கு சென்று கட்டிய பாவாடை தாவணியுடன் அஞ்சலியை என்னுடன் அழைத்து வந்தேன். எனக்கு பெண் குழந்தை இல்லாததால் அவளை என் மகளாக வளர்த்தேன். நான் கஷ்டப்பட்டு அவளை நடிகையாக்கினேன். அவளுக்கு இயக்குனர் களஞ்சியம் 6 மாதங்கள் நடிப்பு பயிற்சி அளித்தார். அஞ்சலி முதன்முறையாக செலுங்கு படம் ஒன்றில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அந்த படம் ஓடவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அதுவும் ஓடவில்லை. அவள் முதன்முதலாக கன்னட படம் ஒன்றுக்கு தான் சம்பளம் வாங்கினாள். அவளுக்கு ரூ.50,000 சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு மலையாள படம் ஒன்றில் நடித்து ரூ.1 லட்சம் சம்பளம் பெற்றாள். கற்றது தமிழ் படத்திற்கு அவளுக்கு சம்பளம் இல்லை. ஆயுதம் செய்வோம் படத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்தார்கள். எங்கேயும் எப்போதும் படத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாள். கருங்காலி படத்திற்கு ரூ.8 லட்சம் கொடுத்தனர். சேட்டை படத்திற்கு தான் அவளுக்கு பெரிய தொகையாக ரூ. 20 லட்சம் கிடைத்தது. அவள் சம்பாதித்த பணத்தில் அவள் பெயரில் வளசரவாக்கத்தில் வீடு வாங்கி கொடுத்தேன். இதற்கிடையே அவள் எத்தனை முறை வீட்டை விட்டு ஓடினாள் என்பது எனக்கு மட்டுமே தெரியும். ஒரு முறை என்னை வீட்டின் அறைக்குள் பூட்டிவிட்டு கன்னட இயக்குனர் பரத்ஷா என்பவருடன் ஓடிவிட்டாள். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று பெங்களூர் செல்லும் பேருந்தில் இருந்த அவளை வீட்டுக்கு அழைத்து வந்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டு அவளை நட்சத்திர நடிகையாக்கியதற்கு அவள் பரிசாக என்னை சித்தி என்று கூறிவிட்டாள் என்று கண்கலங்கியபடி கூறினார். இந்நிலையில் பாரதிதேவி தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளிக்க பேட்டி வருமாறு, அஞ்சலி நடிகையானதும் அவள் சம்பளத்தில் ஒரு பங்கு எனக்கும், ஒரு பங்கு அஞ்சலிக்கும், ஒரு பங்கு அவளது அம்மாவுக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அஞ்சலிக்கு முதலில் பட வாய்ப்பு கொடுத்தவர் என்ற பெயரில் அவளுக்கு களஞ்சியம் சில ஆலோசனைகள் கூறுவார். அவர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதில்லை. அஞ்சலிக்கு கோடிக் கணக்கில் எல்லாம் சொத்து இல்லை. அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரிய வந்தாலே போதும். அவளின் அண்ணன் ரவிசங்கர் மீது தான் சந்தேகமாக உள்ளது என்றார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!