என் பொண்ணு திரிபுர சுந்தரி (எ) அஞ்சலியை யாரோ கடத்திட்டாங்க: கமிஷனரிடம் சித்தி புகார்


avatar

சென்னை: நடிகை அஞ்சலியை யாரோ கடத்தியுள்ளதாக அவரது சித்தி பாரதி தேவி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவி இன்று எழும்பூரில் இருக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.


அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, வளசரவாக்கம் பாத்திமா நகரில் கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். எனது அக்கா பார்வதி தேவியின் கணவர் பிரிந்து சென்ற பிறகு 2 பெண் மற்றும் ஆண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் அவரது 3 வது குழந்தையான அஞ்சலி என்கிற திரிபுர சுந்தரியை கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி தத்து எடுத்து வளர்த்து வந்தேன். எனது மகள் அஞ்சலியை நடிகையாக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வாய்ப்புத் தேடி வந்த போது மு.களஞ்சியம் இயக்கி வந்த சத்தமின்றி முத்தமிடு என்ற படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த படம் இடையில் நின்று போனது. அதன் பிறகு சில படங்களில் சம்பளம் இல்லாமல் அஞ்சலி நடித்து வந்தார். அந்த படங்களும் நின்று போயின. அதன் பிறகு வெயில், அங்காடி தெரு, கலகலப்பு படங்களில் நடித்து புகழ் பெற்றார். அவர் நடித்து வெளிவந்துள்ள சேட்டை என்ற படம் நல்ல முறையில் ஓடிக் கொண்டு இருக்கிறது. சூர்யாவுடன் சிங்கம் 2 உள்பட தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார். சில படங்களுக்கு ஒப்பந்தமும் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி எனது கணவர் சூர்யாவுடன் படப்பிடிப்புக்காக ஹைதாராபாத் சென்று இருந்த அஞ்சலி மாயமாகிவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியாமல் திண்டாடி வந்தோம். இந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீள்வதற்குள் என் மீதும், இயக்குனர் மு.களஞ்சியம் மீதும் எனது மகள் அஞ்சலி பொய் செய்திகளை பரப்பி வருகிறார். அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் நாங்கள் பறித்துக் கொண்டோம் என அபாண்டமான பழியை சுமத்தி வருகிறார். அவர் ஒரு போதும் இப்படியெல்லாம் பேச மாட்டார். அவரை யாரோ சிலர் கடத்திச் சென்றுள்ளனர் என சந்தேகம் அடைகிறேன். அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!