அஞ்சலி ப்ளீஸ்... டெய்லி மாத்திரை சாப்டு, இல்லாட்டி செத்துடுவ- சித்தி பாரதிதேவி உருக்கம்


avatar

அஞ்சலி ப்ளீஸ்... டெய்லி மாத்திரை சாப்டு, இல்லாட்டி செத்துடுவ- சித்தி பாரதிதேவி உருக்கம்  10-bha10
சென்னை: நடிகை அஞ்சலிக்கு கொடிய நோய் உள்ளதாகவும் தினமும் மாத்திரை சாப்பிடாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் அவரது சித்தி பாரதிதேவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து பாரதி தேவி அளித்த பேட்டி வருமாறு:- அஞ்சலியை என் மகள் போல் பார்த்துக்கிட்டேன். ஒரு தோழி மாதிரி கூடவே இருந்தேன். சினிமாவில் இவ்வளவு அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தது நான்தான். என்னைப்போய் சொத்துக்களை அபகரித்ததாக சொல்லி நோகடித்து விட்டார். அஞ்சலி மனதை யாரோ கெடுத்திருப்பது தெரியுது ஒரு தமிழர்தான் இதற்கு பின்னணியில் இருக்கிறார். அஞ்சலிக்கு தனியாக வசிக்க ஆசை வந்து விட்டது. நான் அவரை யாருடனும் பேசவிடவில்லை, சித்ரவதை செய்கிறேன் என்கிறார். இவ்வளவு காலமாக வளர்த்து ஆளாக்கி இருக்கேன். அவள் அம்மா, அண்ணன் யாரும் வந்து பார்க்கவில்லை. இப்போ சம்பாதிக்கிறார் என்றதும் ஓடி வருகிறார்கள். எனக்குள்ள பயமெல்லாம் அவர் உடல் நிலை பற்றிதான். அஞ்சலிக்கு கொடிய நோய் இருக்கு அதற்காக தினமும் அவர் மாத்திரை சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிடாவிட்டால் உயிரோடு இருக்க முடியாது. என்ன நோய் என்பதை சொல்ல மாட்டேன். அதுபற்றி சொன்னால் அவர் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும். நான்தான் சினிமாவில் வளர்த்து விட்டேன். நானே அவள் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்க மாட்டேன். அஞ்சலி சம்பாத்தியத்தில் வீடு, கார் வாங்கி இருக்கேன். அவர் பணம் எதுவும் எனக்கு தேவை இல்லை. எல்லாவற்றையும் திருப்பி கொடுத்து விடுவேன். இவ்வாறு பாரதி தேவி கூறினார்.

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!