காதலன் பேச்சை கேட்டு நடிகை அஞ்சலி ஆடுகிறார்- சித்தியின் முதல் ரகசியம் வெளியீடா?


avatar

சென்னை: காதலன் பேச்சை கேட்டு நடிகை அஞ்சலி என் மீது புகார் சொல்கிறார் என அவரது சித்தி பாரதி தேவி அஞ்சலி மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான தனது சொத்துகளை இயக்குனர் களஞ்சியமும், தனது சித்தி பாரதிதேவியும் அபகரித்துவிட்டதாக நடிகை அஞ்சலி நேற்று பரபரப்பாக பேட்டி அளித்தார். இது குறித்து பாரதிதேவி இன்று நிருபர்களிடம் விளக்கமளித்தார்.

அஞ்சலி எனது அக்காவின் மகள்தான். 4 வயதாக இருக்கும்போது அஞ்சலியை நான் தத்தெடுத்துக்கொண்டேன். அவரது அம்மா வெளிநாட்டில் வீட்டு வேலை செய்வதற்காக சென்றுவிட்டார். எனது அம்மாதான் அஞ்சலியை வளர்த்தார்.

ரொம்ப ஒண்ணும் சம்பாதிச்சுடல... சினிமாவில் அஞ்சலிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்துவிடவில்லை. அவர் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் தான் சம்பளமாக வாங்கினார்.

ஆர்யா தான் பர்ஸ்ட் பெரிய ஹீரோ... இதுவரை அவர் பெரிய நடிகர்களுடன் நடித்ததில்லை. இப்போதுதான் ஆர்யாவுடன் நடித்திருக்கிறார்.


கோடிக்கணக்கில் அவர் சேர்த்த சொத்தை நான் அபகரித்துவிட்டதாக சொல்லி இருக்கிறார். அவர் சம்பளத்தில் ரூ.30 லட்சம் ரூபாயை அவரது அம்மாவிடம் கொடுத்திருக்கிறேன். அஞ்சலிக்கும் ரூ.50 லட்சம் தருவதாகவும், பிளாட் தருவதாகவும் கூறினேன்.

எனக்கும் அஞ்சலிக்கும் எந்த விரோதமும் இல்லை. ஆனால் அஞ்சலி அவரது காதலன் பேச்சை கேட்டுக்கொண்டு என் மீது குற்றச்சாட்டு சொல்கிறார். அவரது காதலன் யார் என்று எனக்கு தெரியாது.

அஞ்சலியே கதி... என் குடும்பம், கணவரைவிட்டு நான் இதுநாள் வரை அஞ்சலிக்கு துணையாக இருந்தேன். அஞ்சலியின் அம்மாவுக்கு என்னால் ஆபத்து என்று கூறுகிறார். ஆனால் அவரது அம்மா இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.அம்மா வரட்டும்... அப்புறம் மீதி

என்னை சந்திக்க இன்று குடும்பத்தினருடன் அஞ்சலி அம்மா சென்னைக்கு வருகிறார். அஞ்சலி பற்றிய மேலும் பல விவரங்களை பிறகு சொல்கிறேன். இவ்வாறு பாரதிதேவி கூறினார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!