நடிகை அஞ்சலி புகார்! இயக்குநர் களஞ்சியம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி தன்னிலை விளக்கம்!


avatar

நடிகை அஞ்சலி புகார் கூறியதை தொடர்ந்து, இயக்குநர் களஞ்சியம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அஞ்சலி, தனது தாயார் என்று கூறிக்கொண்டு பாரதி தேவி என்பருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பாரதி தேவியின் வீட்டில் இருந்து அஞ்சலி திடீரென வெளியேறினார். ஐதராபாத்தில் உள்ள அஞ்சலி, சென்னையில் உள்ள சினிமா நிருபர்களுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது சென்னையில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும், பாரதிதேவியுடன் சேர்ந்து இயக்குநர் களஞ்சியமும் தமக்கு சித்ரவதை செய்வதாகவும், கொலை மிரட்டல் வருவதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் களஞ்சியம், தன்னுடைய வழக்கறிஞர்களுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலி, தமக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அஞ்சலியை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. அவருடைய சொத்துக்களை பறிக்க முயற்சி செய்யவில்லை. அஞ்சலி புகாரின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமக்கு எதிராக அஞ்சலியை பொய் பிரச்சாரம் செய்யும்படி சிலர் தூண்டிவிடுவதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் களஞ்சியம் கூறியுள்ளார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!