நடிகை அஞ்சலியை கடத்தி விட்டனர்: போலீஸ் கமிஷனரிடம் சித்தி புகார்


avatar


நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவி இன்று எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது அக்காள் பார்வதி மகள் அஞ்சலி. நான் அஞ்சலியை மகளாக ஏற்று வளர்த்தேன். சினிமாவில் நடிக்க வைத்து பிரபலம் ஆக்கினேன். 'பலுபு' தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக அவர் ஐதராபாத் போனார். அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர் கடந்த 8-ந்தேதி திடீரென காணாமல் போய் விட்டார்.

என் மீதும், டைரக்டர் களஞ்சியம் மீதும் அவதூறாக அஞ்சலி பேட்டியளித்ததை பத்திரிகையில் பார்த்து அதிர்ச்சியானோம். அஞ்சலி அப்படி பேசக்கூடியவர் அல்ல. அஞ்சலியை யாரோ கடத்தி துன்புறுத்தி எங்களுக்கு எதராக குற்றச்சாட்டுகள் சொல்லி வற்புறுத்துவதாக தெரிகிறது.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதேபோல், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த நடிகை அஞ்சலியை நேற்று காலையில் இருந்து காணவில்லை என்று அவரது அண்ணன் ரவிசங்கர் ஜூபிளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!