நடிகை அஞ்சலி மாயம்! அண்ணன் போலீசில் புகார்!


avatar

ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த நடிகை அஞ்சலியை நேற்று காலையில் இருந்து காணவில்லை என்று அவரது அண்ணன் ரவிசங்கர் ஜூபிளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார்.

மார்ச் மாதம் 31–ந்தேதியில் இருந்து நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனது சித்தப்பாவுடன் தங்கியிருந்தார். நேற்று காலை சித்தப்பா குளிக்கச் சென்ற சமயத்தில் 8 மணியில் இருந்து 9 மணிக்குள் நடிகை அஞ்சலி மாயமாகிவிட்டார்.

அஞ்சலி எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் காணாமல் போனதில் இருந்து அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலியை யாராவது கடத்திச்சென்றிருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கிறது. எனவே அவளை கண்டுபிடித்து தரும்படி புகாரில் ரவிசங்கர் கூறியிருக்கிறார். ஜூபிளி ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!