சந்தானம் தின்ன ஆசைப்படுவது திருட்டு லட்டு -கமிஷனரிடம் பாக்யராஜ் கம்ப்ளெயிண்ட்


avatar

'க.ல.தி. ஆசையா' படத்தின் கதை என்னுடையது. அதை சந்தானம் திருடிவிட்டார். நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன். என்று ஒரு உதவி இயக்குனர் அபயக்கரம் நீட்டி சிலமணி நேரங்கள் கூட ஆகாத நிலையில், இயக்குனர் கே.பாக்கியராஜ், படத்தயாரிப்பாளர்களான ராமநாராயணன் மற்றும் சந்தானத்தின் மீது கமிஷனர் அலுவலகத்தில் கம்ப்ளெயிண்ட் கொடுக்குமளவுக்குப் போய்விட்டார்.

"உள்ளே வெளியே" மாதிரி, ஆரம்பத்திலிருந்தே 'க.ல.தி. ஆ' படம் பாக்கியராஜின் 'இன்று போய் நாளை வா' வின் ரீ-மேக்தான் என்றும், பின்னர் இல்லை என்றும் ஒரு குழப்பமான விளையாட்டை நடிகர் சந்தானமும், மவுனமாக இருந்தே சங்கதிகளை மழுப்புவதில் அவரையும் விட சிறந்த நடிகரான ராமநாராயணனும் ஆடிவந்தனர்.

"உங்கள் படம் எனது 'இன்று போய் நாளை வா’ வின் உல்டா இல்லையெனில் தைரியமாக எனக்கு ஒருமுறை உங்கள் படத்தைப் போட்டுக்காட்டுங்கள்" என்று ராமநாரயண, சந்தான சந்ததியினருக்கு பாக்கியராஜ் அனுப்பிய செய்திகள் சற்றும் பரிசீலிக்கப்படாமல் போன நிலையில், பஞ்சாயத்து வைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பலனில்லை.

தற்போது படத்தின் ஆடியோ ட்ரெயிலர்களும் வெளியிடப்பட்டு பொங்கல் ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கவிதாலயா புஷ்பா கந்தசாமி ராமநாராயணன் மற்றும் சந்தானம் ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடரவும் முடிவு செய்திருக்கிறார் பாக்யராஜ்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!