பொங்கலுக்கு வெளியாகும் ‘சமர்’: ஜனவரி 13-ல் திரைக்கு வருகிறது


விஷால் - திரிஷா நடிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் "சமர்". இப்படம் சென்ற வருடத்தின் இறுதி வாரத்தில் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், அன்றைய தினம் அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியானதால் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்தனர்.

ஆனால், இதுநாள் வரை இப்படம் வெளியாவதற்குண்டான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் சந்தேகமாகவே இருந்தது. அந்த சந்தேகத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அதாவது, வருகிற பொங்கலுக்கு இப்படம் வெளியிடப்படுகிறது. அதன்படி ஜனவரி 13-ந் தேதி இப்படம் உலகமெங்கும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, பொங்கல் அன்று ‘விஸ்வரூபம்’ வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக கமல் அப்படத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். அதை தவிர்த்து 'அலெக்ஸ் பாண்டியன்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'புத்தகம்' ஆகிய படங்களும் பொங்கல் ரேஸில் களமிறங்கியுள்ளன.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!