சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸாகும் ஆர்யாவின் சேட்டை!


avatar


இப்போதைக்கு டஜன் கணக்கில் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஒரே ஹீரோ யாரென்று கேட்டால் அது ஆர்யா தான் என்று சொல்கிறார்கள்.

அந்தளவுக்கு கதைகளைக் கூடக்கேட்காமல் கேட்கிற பணத்தை குடுங்க, உங்களுக்கு கால்ஷீட் ரெடி என்ற பாணியில் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து பிஸியாக நடித்து வருகிறார் ஆர்யா.

ஆனால் ‘வேட்டை’ படத்துக்குப் பிறகு கொஞ்சம் கேப் விழுந்து விட்டதால் கொஞ்சம் உற்சாகம் குறைந்து காணப்பட்ட அவருக்கு சேட்டை படம் ஏப்ரல் ரிலீஸுக்கு ரெடியாக இருப்பதால் குஷி மூடில் இருக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்ட நிலையில் இப்போது அந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது சேட்டை பட டீம். வருகிற ஜன-30 ஆம் தேதி இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனை மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆர்யவுக்கு ஜோடியாக இந்தப்படத்தில் ஹன்ஷிகாவும்,அஞ்சலியும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், ப்ரேம்ஜி மற்றும் பலர் நடித்து வரும் இந்தப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை ஆகிய படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இந்தப்படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

30-ஆம் தேதி நடக்கும் இந்த ஆடியோ பங்ஷனை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விற்கும் விதமாக பொழுதுபோக்குகளுடன் கூடிய நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த விழாவில் படத்திலிருந்து 3 பாடல்களும் ஒரு ட்ரெய்லரையும் போட்டுக்காட்ட இருக்கிறார்களாம்.

படத்தை வருகிற சம்மர் சீஸனான ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படத்தை தயாரித்து வரும் யு டிவி நிறுவனம்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!