யூடியூப்பில் 'கங்னம் ஸ்டைல்' வீடியோவை பார்த்த 200 கோடி பேர்: புதிய சாதனை


avatar

சியோல்: தென் கொரிய பாப் பாடகரான பிஎஸ்ஒய்-இன் கங்னம் ஸ்டைல் வீடியோவை யூடியூப்பில் இதுவரை 200 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

தென் கொரிய பாப் பாடகரான பி.எஸ்.ஒய் கடந்த 2012ம் ஆண்டு கங்னம் ஸ்டைல் என்ற பாப் பாடல் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது. சிறுவர்கள் கூட கங்னம் ஸ்டைல் பாடலை பாடிக் கொண்டு அந்த நடன அசைவை செய்து காட்டினார்கள்.

கங்னம் ஸ்டைல் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால் அது இன்னும் பிரபலமாகவே உள்ளது. அந்த வீடியோவை யூடியூப்பில் போட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் அதை 200 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இது குறித்து பி.எஸ்.ஒய். கூறுகையில்,

200 கோடி பேர் என் வீடியோவை பார்த்துள்ளனர். இது மிகப்பெரிய கௌரவம் ஆகும். இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக நான் விரைவில் ஒரு நல்ல பாடலை வெளியிடுவேன் என்றார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!