நடிகை ஜெயா பச்சனின் பயிர்கள் சேதம்: வங்கி கணக்கை துவங்கி ரூ. 13,000 நஷ்ட ஈடு வழங்கிய ம.பி. அரசு


avatar

போபால்: மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிக்கு அளிக்கப்பட்ட நஷ்ட ஈடு பாலிவுட் நடிகை ஜெயா பச்சனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஜெயா பச்சனின் பயிர்கள் சேதம்: வங்கி கணக்கை துவங்கி ரூ. 13,000 நஷ்ட ஈடு வழங்கிய ம.பி. அரசு

மத்திய பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெய்த மழை மற்றும் வீசிய புயலால் பயிர்கள் சேதம் அடைந்தது. இதையடுத்து மாநில அரசு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் அரசு நஷ்ட ஈட்டை செலுத்தியது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜெயா பச்சனுக்கு சொந்தமாக சேவனியா கோண்ட் கிராமத்தில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் பயிர்கள் சேதம் அடைந்ததால் அவருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

அவரது வங்கிக் கணக்கு எண் தெரியாததால் அரசே அவரது பெயரில் கூட்டுறவு வங்கியில் ஒரு கணக்கை துவங்கி அதில் ரூ.13 ஆயிரம் செலுத்தியுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!