சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து பதட்டப்பட்ட ரஜினி


avatar

சென்னை: நடிகை சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து ரஜினிகாந்த் பதட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பாலிவுட்டில் வெற்றி நாயகியாக இருக்கும் சோனாக்ஷி சின்ஹா கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படம் மூலம் கோலிவுட்டுக்கு வருகிறார்.

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஸ்டாருடன் நடிக்கிறோமே என்று நினைத்தபோது சோனாக்ஷிக்கு லிங்கா படப்பிடிப்பின் முதல் நாளில் ரஜினியை பார்த்ததும் பதட்டமாகிவிட்டதாம்.

உடனே சோனாக்ஷி ரஜினியிடம் சென்று சார் உங்களுடன் நடிப்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. ஆனால் அதே நேரம் பதட்டமாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சோனாக்ஷி கூறியதை கேட்ட ரஜினி அவரிடம், நீங்க ஏன் என்னை பார்த்து பதட்டப்படுகிறீர்கள். நண்பரின் மகளுடன் நடிக்கிறோமே என்பதை நினைத்து எனக்கு தான் பதட்டமாக உள்ளது என்றாராம்.

சோனாக்ஷி சின்ஹா ரஜினியின் நண்பரான இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!