‘வணங்காமுடி’யில் கறார் போலீசாக களமிறக்கும் அரவிந்த்சாமி


avatar

சென்னை: இயக்குனர் செல்வாவின் புதிய படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் அரவிந்த்சாமி.

தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து ரோஜா படம் மூலம் நாயகன் ஆனவர் அரவிந்த்சாமி. மின்சாரக்கனவு, இந்திரா, புதையல் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த அரவிந்த்சாமி முன்னணி நாயகர்களுள் ஒருவராக திகழ்ந்தார்.

இடையில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அரவிந்த்சாமி, பின்னர் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் செல்வாவின் படம் மூலம் மீண்டும் கதாநாயகனாகிறார் அரவிந்த்சாமி.

ஏற்கனவே புதையல் படத்தில் செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படத்திற்கு வணங்காமுடி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடமாம். செல்வா சொன்ன கதையும், ஹீரோ கதாபாத்திரமும் பிடித்ததால் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ஒரு வரியில் சொல்லப் பட்ட கதையை மிகவும் அழகாக திரைக்கதையாக்கிய செல்வாவைப் பாராட்டியுள்ளார் அரவிந்த்சாமி.

அதேபோல், நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் சந்திக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட கதை தான் வணங்காமுடி எனக் கூறும் இயக்குநர் செல்வா, இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஐந்து வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அஜீத் -கௌதம் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அத்தகவலை அவர் மறுத்திருந்தார். ஆகஸ்ட் மாதம் வணங்காமுடியின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!