விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்


avatar

சினிமாவில் பிஆர்ஓ என்பவர் யார்... ஒரு படம் அல்லது நட்சத்திரம் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லி, அவற்றை வெளியில் பிரபலப்படுத்துபவர்.

அந்த வகையியில் தமிழ் சினிமாவில் நடிகர்- இயக்குநர் பார்த்திபனை விட பலே பிஆர்ஓவைப் பார்க்க முடியாது. அவருக்கு அவரே மிகப் பெரிய பிஆர்ஓதான். அவருக்கும் அவர் படத்துக்கும் எந்த முறையில் விளம்பரம் தேடலாம் என்பதற்கு பெரிய யோசனைக் கிடங்கே வைத்திருக்கிறார் போலும்!

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம் 31-par10

இந்த வாரம் முழுக்க ஏதோ ஒரு வகையில் மீடியாவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இசை வெளியீடு.. தொடர்ந்து பிரஸ் மீட்.

தொடர்ந்து வந்த நாட்களில் இயக்குநர் அமரர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் எனப் புகார். மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான்தான் முறையாக அறிமுகப்படுத்துவதாக அழைப்பிதழில் அவர் தண்டோரா போட, மணிவண்ணன் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொந்தளித்துவிட்டார்.

அதற்கு பார்த்திபன் அளித்த விளக்கத்தை சுரேஷ் காமாட்சி ஏற்றுக் கொண்டாரா.. அல்லது இன்னும் கோபப்பட்டிருப்பாரா? என்பது அவரைக் கேட்டால்தான் தெரியும்.

இதோ பார்த்திபன் விளக்கம்..

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம் 31-par11

அடுத்த பிரச்சினை ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜ் வேடத்துக்கு பார்த்திபனைத்தான் முதலில் அழைத்தார்களாம். அப்போது ஷங்கரிடம், 'விஜய் வேஸ்ட்..அவருக்கு நடிப்பு வராது. சூர்யாவை நடிக்க வையுங்கள்.. ஆமீர்கான் வேடத்துக்கு பர்பெக்டாக இருப்பார்,' என்று பார்த்திபன் சொன்னதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதாம்.

அதற்கு விளக்கம் அளிப்பதாகக் கூறிக் கொண்டு, ஏதோ ஆயா வடைசுட்ட கதை என்றெல்லாம் எழுதி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.

இதோ அந்த இரண்டாவது அறிக்கை...

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம் 31-par12

விளைவு.. நிகில் அனுப்பிய படத்தின் பிரஸ் ரிலீஸையும் தாண்டி, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஏதோ ஒரு வகையில் தினசரி பார்த்திபன் செய்தியைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறது மீடியா.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!