விஜய் டிவி டெலி அவார்ட்ஸ்: உங்க மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகை யார்?


avatar

விஜய் டிவி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது.

விஜய் டி.வி.யின் நிகழ்ச்சிகளுக்கு பொலிவு சேர்த்த திரை நட்சத்திரங்களை வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் நேயர்களோடும் இணைந்து மே 17-ம் தேதி விஜய் டெலி அவார்ட்ஸ் விருது நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

இந்நிகழ்ச்சியில் நேயர்களே திரை பிரபலங்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக இருக்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான பிரபலங்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கும் வகையில் நட்சத்திரங்களின் பெயர்களை எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இவ்வாறு தேர்வாகும் திரை பிரபலத்திற்கு விஜய் டெலி அவார்ட்ஸ் விருது வழங்கப்படும்.

லோக்சபா தேர்தலுக்கு ஓட்டுப்போட்டு ஓய்ந்து போய் இருக்கும் தமிழக தொலைக்காட்சி ரசிகர்களே எஸ்.எம்.எஸ் அல்லது ஆன்லைனில் உங்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகையர், பாடகர், துணைநடிகர், நடிகையர், வில்லன், வில்லிக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்யுங்கள்.

விஜய் டிவி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுவழங்கி கவுரவிக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்பவர்களின் உங்களின் மனம் கவர்ந்தவர் யார் என்பதே கூறி வாக்களிக்கலாம்.

நீயா நானா கோபிநாத், சூப்பர் சிங்கர் மா.கா.பா ஆனந்த், என போட்டியாளர் வரிசையில் உள்ளனர். உங்களுக்குப் பிடித்த தொகுப்பாளரை தேர்வு செய்யலாம்.

தொகுப்பாளினிகள் வரிசையில் ரம்யா, திவ்யதர்சினி, அனு என போட்டியாளராக உள்ளனர். அதிக ஓட்டு எந்த தொகுப்பாளினிக்கு விழப்போகிறதோ தெரியவில்லை.

ஆபிஸ் நாயகிகள் ராஜி, தாயுமானவன், புதுக்கவிதை நாயகி மகேஸ்வரி, கல்யாணி, மீனாட்சி, என அழகு தேவதைகள் போட்டியாளர்களாக உள்ளனர்.

ஆபிஸ் கதாநாயகன் கார்த்திக் தொடங்கி தாயுமானவன் பாரதி, சரவணன் மீனாட்சி ஹீரோ, 7சி ஸ்டாலின் என நேயர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களும் உள்ளனர்.

மதியழகன், ராஜசேகர், குயிலி,சூசன், சுதாசந்திரன் உள்ளிட்டோர் துணை நடிகர்கள் பட்டியலிலும் உள்ளனர். உங்களின் மனம் கவர்ந்தவர்களை எஸ்.எம்.எஸ் அனுப்பி தேர்வு செய்யலாம் அல்லது ஆன்லைன் மூலமும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யலாம்.

சிறப்பு வாய்ந்த இந்த விருது மே 17ம் தேதி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது. ஜூன் முதல்வாரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!