பேரழகன்' சசிசங்கர் இயக்கத்தில் பகடை பகடை!


avatar

சூர்யா நடித்த பேரழகன் படம் நினைவிருக்கிறதா... அந்தப் படத்தை இயக்கிய சசி சங்கர் இயக்கும் புதிய படம் பகடை பகடை.

திலீப் குமார் இந்தப் படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். ஜெயம் படத்தில் கோபிசந்தின் இளவயது கேரக்டரில் நடித்தவர்தான் திலீப் குமார்.

கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்க, ரிச்சு என்ற புதுமுகம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் வேறு யாருமல்ல, கதாநாயகியாக நடிக்கும் திவ்யா சிங்கின் உடன் பிறந்த தங்கை. அக்காவும் தங்கையும் ஒரே படத்தில் நடிக்கிறார்கள். மற்றும் கோவை சரளா,இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து, சங்கர், கனகப்ரியா, முத்துக்காளை ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

வசனம் வி.பிரபாகர், இசை - ராம்ஜி - A.C. ஜான்பீட்டர். கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் சசிசங்கர். தமிழில் பேரழகன் படத்தை மட்டுமே இயக்கியிருந்தாலும், மலையாளத்தில் 15 படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் இரண்டு படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

பகடை பகடை படம் குறித்து சசி சங்கர் கூறுகையில், "பணம் எப்படியெல்லாம் ஒருவன் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை காதல் மற்றும் அக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறோம்.

பகடைக்காய் மாதிரி பணம் எப்படியெல்லாம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கான பதிலை இதில் பதிவு செய்கிறோம். இந்த கதாப்பாத்திரத்திற்கு திலீப்குமார் ஏகப் பொருத்தமாக இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்தோம். இது ஒரு பக்கா கமர்ஷியல் படம்," என்றார் சசிசங்கர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!