மைசூரில் பார்வையற்ற மாணவர்களைச் சந்தித்த ரஜினி!


avatar

மைசூர்: மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பார்வையற்ற மாணவர்களைச் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

லிங்கா படப்பிடிப்புக்காக குழுவினருடன் மாண்டியாவில் முகாமிட்டுள்ளார் ரஜினி. முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள், ரஜினியை எப்படியாவது சந்தித்துப் பேச வேண்டும், படமெடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினர்.

டாக்டர் பிகே பால் என்பவரிடம் அவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து எப்படியாவது ரஜினியைச் சந்திக்க அழைத்துச் செல்லுமாறு கூறினார்களாம்.

ஆனால் படப்பிடிப்பு நடக்கும் இடம் எதுவென்று அவர்களுக்குத் தெரியவில்லையாம். உடனே அனைவரும் கிளம்பி மாண்டியா போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு ரஜினி ஷூட்டிங் நடக்கும் இடத்தைக் கேட்டுள்ளனர்.

மாண்டியாவிலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள மேல்கோட்டை என்ற இடத்தில் படப்பிடிப்பு நடப்பதாக போலீசார் தெரிவித்தார்கள்.

மாணவர்கள் அங்கு சென்றபோது மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விஷயம் தெரிந்ததும், இந்த மாணவர்களைச் சந்திக்க வந்துவிட்டார் ரஜினி.

பார்வையற்ற மாணவர்கள் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒவ்வொரு மாணவரிடமும் பேசிய ரஜினி, அன்புடன் அவர்கள் கன்னத்தைத் தட்டி, நலம் விசாரித்தார். அனைவருடனும் படம் எடுத்துக் கொண்டார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!