கவுண்டருக்கு இதெல்லாம் தெரியுமா சந்தானம்?


avatar

நானும் அண்ணன் கவுண்டமணியும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம், என்று ஒரு முறை பேட்டியளிதிருந்தார்.

இதுபற்றி கவுண்டமணியிடம் கேட்டபோது, 'அப்படியா சொல்லியிருக்கார்.. சரி, இருந்துட்டுப் போகட்டும், அதனாலென்ன?" என்று கூறிவிட்டார்.

இப்போது மீண்டும் சந்தானம் அளித்துள்ள ஒரு பேட்டியில், "தங்கவேலுவும் அண்ணன் கவுண்டமணியும்தான் எனக்கு முன்னோடிகள்.

அண்ணன் கவுண்டமணியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆசை. இருவருமே அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி ஒரு கதை இருந்து யாராவது வந்து சொன்னால், கவுண்டமணியிடம் பேசி கால்ஷீட் வாங்குவேன்," என்றெல்லாம் சொல்லியிருந்தார்.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்புதான், நான் கவுண்டமணியைப் பின்பற்றவில்லை. என் காமெடி வேறு என்றெல்லாம் பேட்டி கொடுத்து வந்தார் சந்தானம் என்பது நினைவிருக்கலாம்.

இப்போது கவுண்டமணி மீது சந்தானத்துக்கு திடீர் பாசம் வந்திருக்கிறது... பரவாயில்லை, காலம் கடந்தாலும், தனக்கு வாழ்வு தந்தவரை கொண்டாடுவது நல்ல மாற்றம்தானே!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!