காஜல் அகர்வாலைத் தொடரும் 1 கோடிப் பேர்!


avatar

சமூக வலைத் தளங்களில் தங்கள் செல்வாக்கைக் காட்டுவதில் நடிகர் நடிகைகள் இன்றைக்கு குறியாக உள்ளனர்.

பத்திரிகைப் பேட்டியென்றால் சிணுங்கும் அவர்கள், தங்கள் மனதில் உள்ள கருத்துக்களை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதில் கவனம் செலுத்துகின்றனர்.

அந்த வகையில், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை பேஸ்புக்கில் ஒரு கோடிப் பேர் தொடர்வதாக தகவல் வெளியானது.

இப்போது தென்னிந்தியப் படங்களின் மூலம் புகழ்பெற்ற காஜல் அகர்வாலுக்கும் 1 கோடி ரசிகர்கள் பேஸ்புக்கில் தொடர்கின்றனர்.

பொம்மலாட்டம் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் காஜல். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், இங்கு பெரிய வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்குக்குப் போனார். அங்கு பெரிய நடிகையானார்.

தெலுங்கில் மகதீரா பெற்ற வெற்றியும், அதன் தமிழாக்கமான மாவீரனுக்கு தமிழில் கிடைத்த வரவேற்பும், மீண்டும் காஜலை கோடம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தது. துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான், ஜில்லா என பெரிய படங்களின் நாயகியானார்.

காஜல் அகர்வால் பேஸ் புக்கில் அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகை என்ற சாதனை படைத்துள்ளார். இவரது பேஸ்புக் பக்கத்தில் 1 கோடி ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். இவருக்கு அடுத்து ஸ்ருதிஹாசனுக்கு 62 லட்சம் பேரும், சமந்தாவை 52 லட்சம் பேரும், அனுஷ்காவை 48 லட்சம் பேரும் பேஸ்புக்கில் பின்பற்றுகின்றனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!