மாடல் அழகியை நடிகர் சீரழித்து, கடித்து, மார்பில் பீர் பாட்டிலை உடைத்தது உண்மையே: போலீஸ்


avatar

மும்பை: இந்தி நடிகர் இந்தர் குமார் 22 வயது மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்ததும், சிகரெட் துண்டுகளை வைத்து சூடுபோட்டதும் மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

22 வயது மாடல் அழகியை நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், இந்தி நடிகருமான இந்தர் குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசார் இந்தர் குமாரை கைது செய்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் இந்தர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியாகியுள்ளது. மேலும் அந்த பெண்ணின் கழுத்து, தோள்களில் சிகரெட்டால் சுட்ட அடையாளம், கைகளில் கடித்த தடம், உணவு உண்ணப் பயன்படுத்தப்படும் ஃபோர்க்கால் குத்திய அடையாளம் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இது தவிர அந்த பெண்ணின் மார்பில் இந்தர் குமார் பீர் பாட்டிலை உடைத்ததால் ஏற்பட்ட காயமும் உள்ளது என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

இந்தர் குமார் அந்த பெண்ணை அவரது வீட்டுக்கு வரவழைத்து ஒரு அறையில் அடைத்து 2 நாட்களாக சீரழித்துள்ளார். அங்கிருந்து தப்பித்த அந்த பெண் நடந்தவை குறித்து போலீசில் புகார் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!