கோச்சடையானுக்கு முன் லிங்கா வந்துவிடும்... ! - இது பேஸ்புக் கலாட்டா


avatar

எருதின் வலி காக்கைகளுக்குத் தெரியாது என்றொரு வழக்குச் சொல் இருக்கிறது தமிழில்.

கோச்சடையான் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதுவதும் பேசுவதும் அப்படித்தான் இருக்கிறது.

'ஹை.. பாத்தியா.. நான் சொன்ன மாதிரி கோச்சடையான் வரல' என்ற உணர்வைப் பிரதிபலிப்பதாகவே, இவர்களின் ரியாக்ஷன் அமைந்திருக்கிறது.

கோச்சடையான் மாதிரி பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படங்கள் கடைசி நேரத்தில் வெளியாகாமல் போவதில் சினிமாத் துறை சந்திக்கும் பெரு நஷ்டமோ, அந்தப் படம் மீதான ஆர்வமிழப்பு ஏற்படுத்தும் பின்னடைவுகளும் தெரியாமல் அடிக்கப்படும் கமெண்டுகள் இவை.

பேஸ்புக்கில் இரு நபர்களின் உரையாடல் அதற்கு ஒரு சாம்பிள்... ஒருவர்: இல்லை தமிழ் மட்டும் தள்ளிப்போகுதா.. விக்ரமசிம்ஹா ரிலீஸ் ஆகுமில்லையா? மற்றவர்: இல்லே... எதுவும் ரிலீஸ் ஆகாது. உலக அளவில் 23-ம் தேதிக்கு தள்ளிப் போயிடுச்சி. ஒருவர்: புக்கிங் க்ளோஸ் பண்ணிட்டாங்க. இவனுங்க ஒண்ணும் ரிலீஸ் பண்ணவே வேணாம்.

மற்றவர்: படம் அப்படி ஒண்ணும் இல்ல போலிருக்கு.. அதான் பயந்துட்டாங்களோ.. கோச்சடாயானுக்கு முன், லிங்காவே வந்துடும் போலிருக்கு! ஒருவர்: அட ரஜினி வெறுப்பாளனே, வதந்திய கிளப்பாதே...

இன்னொருவர் இப்படி கமெண்ட் அடித்திருக்கிறார்... 'தமிழகத்தில் கத்திரி வெயில் தள்ளிப் தள்ளிப் போகிறது கோச்சடையான் மாதிரி'. அதற்கு இன்னொருவர் அடித்த கமெண்ட்: கத்திரி வராமலே போகட்டும்!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!