ஒரு முத்தம் ரூ.10 லட்சம்: நடிகையின் அம்மாவின் பலே திட்டம்


avatar

சென்னை: ஒரு முத்தக் காட்சியில் நடிக்க தனது மகளுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் கொடுக்குமாறு கூறுகிறாராம் லட்சுமிகரமான நடிகையின் அம்மா.

லட்சுமிகரமான நடிகை உயர்ந்த நடிகரின் படத்தில் ஒரு முத்தக் காட்சியில் நடித்தாலும் நடித்தார் அது குறித்து தான் பலரும் பேசினர். பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி நடித்ததே. இப்போது என்னவென்றால் இப்படி லிப் டூ லிப் காட்சியில் நடித்துள்ளதே என்று பலரும் வியந்தனர்.

இந்நிலையில் நடிகையை தேடி வரும் கதைகளில் முத்தக் காட்சி இல்லாத கதையே இல்லையாம். இதை பார்த்த நடிகையின் அம்மா சூப்பராக பேசி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை திரும்பிப் போக வைக்கிறாராம்.

அதாவது படத்தில் நடிக்க சம்பளம் கொடுப்பது போக ஒரு முத்தக் காட்சியில் நடிக்க ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். படத்தில் இரண்டு முத்தக் காட்சிகள் இருந்தால் அதற்கு என்று தனியாக ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என்கிறாராம்.

இதை கேட்டு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அம்மாடி இந்த முத்த மீட்டர் ஓவர் வேகமாக அல்லவா ஓடுகிறது என்று கூறி திரும்பிச் செல்கிறார்களாம்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!