சரத்குமாரின் புதிய படம் ‘சண்டமாருதம்’ - நாயகன், வில்லன் ரெண்டுமே அண்ணாச்சிதான்...


avatar

சென்னை: சமீபத்திய படங்களில் பெரும்பாலும் டபுள் ஆக்‌ஷன் படங்கள் தான். அந்த வகையில் தேர்தல் காரணமாக கட்சிப் பணிகளில் கொஞ்சம் பிசியாக இருந்த சரத்குமார் மீண்டும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில். அப்படத்தில் நாயகன், வில்லன் என இரண்டுமே சரத்குமார் தானாம்.

சரத்குமாரின் புதிய படத்திற்கு ‘சண்டமாருதம்' எஅன்ப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

ஏற்கனவே, அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் சரத்குமார் நடித்திருந்தாலும், இப்படத்தில் முதன்முறையாக வித்தியாசமாக நாயகன் மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் சரத்குமார்.

சரத்குமாரின் புதிய படம் ‘சண்டமாருதம்’ - நாயகன், வில்லன் ரெண்டுமே அண்ணாச்சிதான்... 08-sar10

சுனாமியை தூக்கிச் சாப்பிடும் ‘சண்டமாருதம்'...

புயல், சுனாமி போன்றவற்றையும் தாண்டி அசுர வேகத்துடன் வீசும் காற்றுக்கு சண்டமாருதம் என்றுபெயர். எவ்வளவு பெரிய தடைகளையும் உடைக்கும் ஆற்றல் அப்பெரும் காற்றுக்கு உண்டு. இந்தக் கதைக்கு இப்பெயர் பொருத்தமாக இருப்பதால் இப்படத்திற்கு சண்டமாருதம் எனப் பெயர் சூட்டி உள்ளார்களாம்.

டபுள் ஆக்‌ஷன்...

இப்படத்தில் கதாநாயகன் மற்றும் வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சரத்குமார். படத்தின் நாயகி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி...

மேலும், முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். அவர் தவிர விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், காதல் தண்டபாணி , ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் எனப் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

அருண்சாகர் அறிமுகம்...

இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரபல கன்னட நடிகர் அருண்சாகர். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் ராதிகா சரத்குமாரும் நடிக்கிறார்.

சொந்தக் கதை...

சரத்குமார் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில்...

ஏற்கனவே சரத்குமாரை வைத்து ஏய், மகாபிரபு மற்றும் சாணக்கியா படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

ஆகஸ்ட் ரிலீஸ்..

இந்தப் படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 14ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!