பர்ஸ்ட் படம்.. ஹிட்டாக்கணும்டா மவனே.. இயக்குநராக களம் இறங்கும் 'நாக்கு மடிப்பு' நடிகர்


avatar

சென்னை: தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள நிலையில், சினிமா பக்கமும் தன் கவனத்தை சிறிது திருப்பியுள்ளாராம் அந்த கருப்புத் தங்கத் தலைவர்.

தன் வாரிசு ஹீரோவாக அறிமுகமாகவுள்ள படத்திற்கு ஒரு வழியாக நாயகி கிடைத்து விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் தலைவர். இப்படத்திற்கு பூஜை போட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்தில் மற்றொரு அரசியல் கட்சித் தலைவரான நடிகரின் மகன் படம் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தது. கேப் நடிகரின் மகனுக்கு வந்த நிலைமைதன் மகனுக்கும் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் இந்த தலைவர்.

எனவே, மகன் படத்தின் கதையை, குடும்பம், காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள படமாக உருவாக்க முயற்சி செய்கிறாராம். ஒவ்வொரு காட்சியும் நன்றாக வர வேண்டும் என்பதற்காக படத்தின் முழு கதை விவாதத்திலும் கலந்து கொண்டு இந்தக்காட்சியை அப்படி வையுங்கள், அந்தக்காட்சியை இப்படி வையுங்கள் என்று ஆலோசனை வழங்கி வந்தாராம் நடிகர்.

தற்போது ஒருபடி மேலே போய், மகன் படத்தின் முதல் பகுதியை தானே இயக்க முடிவெடுத்துள்ளாராம். கட்சி வேலைகள் ஒருபுறம் இருந்தாலும், சினிமாவில் தன் மகனின் முதல்படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என சபதம் எடுத்துள்ளாராம் நடிகர்

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!