சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தால் முதலில் என் மகன்கள்தான் புரட்சியில் இறங்குவர்: மகிந்த ராஜபக்சே


கொழும்பு: இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தால் தனது மகன்கள்தான் முதல் புரட்சியில் ஈடுபடுவர் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் பக்கமான "@PresRajapaksa"வில் இன்று இளைஞர்களின் கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்சே பதில் அளித்தார்.

சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தால் முதலில் என் மகன்கள்தான் புரட்சியில் இறங்குவர்: மகிந்த ராஜபக்சே

இந்த கலந்துரையாடலில் ராஜபக்சேவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

Pd. @prabudeepan: போரினால் பாதிக்கப்பட வடக்கு கிழக்கு வாழ் இளைஞர்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?

‏@PresRajapaksa: இந்த இளைஞர்களிடம் இருந்து பயங்கரவாதம் அகற்றப்பட்டுவிட்டது. அவர்களை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.

sms1stTM @sms1st: ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை இலங்கையில் தடை செய்யும் திட்டம் இருக்கிறதா?

‏@PresRajapaksa: பேஸ்புக்கில் 3 லட்சம் பேரும் ட்விட்டரில் 25 ஆயிரம் பேரும் லைக் போட்டுள்ளனர். என்னால் அப்படி அவர்களை ப்ளாக் செய்ய முடியும்? அப்படி நான் இந்த சமூக வலைதளங்களை தடை செய்தால் என்னுடைய மகன்களிடம் இருந்துதான் புரட்சியை எதிர்நோக்க வேண்டியது இருக்கும். இவை தவிர பொத்தாம் பொதுவாக இளைஞர் மேம்பாடு, மத மோதல்கள் குறித்த சில கேள்விகளுக்கும் ராஜபக்சே பதிலளித்துள்ளார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!