ஐஸ்வர்யா ராய் என்னை கைவிட்டுட்டாரே... நஷ்ட ஈடு கேட்டு புகார் கொடுத்த இலங்கை ஆசாமி!!


கொழும்பு: "சென்னை ஐஸ் ஹவுசில் இருந்து கொண்டு ஐஸ்வராயை திருமணம் செய்ய கனவு காணும் திரைப்பட வடிவேலு" நிஜத்திலே கொழும்பில் உருவாகி இருக்கிறார். ஐஸ்வர்ராய்க்கும் அந்த ஆசாமிக்கும் தொடர்பு இருந்தததாம். அபிஷேக் பச்சானை திருமணம் செய்து கொண்டதால் அந்த நபருக்கு மன உளைச்சல் என்று இப்போது புகார் கொடுத்திருக்கிறார்.

இலங்கையைச் சேர்ந்தவர் நிரோஷன தேவப்பிரிய. இவர் தற்போது தைவானில் வசித்து வருகிறார். இலங்கை போலீசில் இவர் அளித்துள்ள புகார் இதுதான்..

பாலிவுட் நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வராயுக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. ஆனால் அவர் அபிஷேக் பச்சானை திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். இப்படி ஐஸ்வராராய் என்னை ஏமாற்றியதால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. என் மன உளைச்சலுக்கு காரணமான ஐஸ்வர்யா ராயிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்.

இதுபற்றி என் மருமகன் ரொஷான் அஜித்திடம் கூறியிருந்தேன். மருமகனும் இலங்கையில் வழக்கு தாக்கல் செய்வதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஆனால் மருமகன் வாக்குறுதி அளித்தபடி வழக்கை தொடரவில்லை. அவரும் என்னை ஏமாற்றிவிட்டார். இதனால் நானே தைவானில் இருந்து நேரில் வந்து புகார் அளிக்கிறேன். இதுதான் அந்த புகார்.

இந்த புகாரின் அடிப்படையில் மருமகனை இப்போது இலங்கை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயம் ஐஸ்வர்யா ராய்க்கு தெரியுமான்னுதான் தெரியலையே....

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!