பாலா படத்துக்காக 10 கிலோ எடை குறைந்த வரலட்சுமி


avatar

இயக்குநர் பாலா படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கும் வரலட்சுமி பத்துகிலோ எடை குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படம் 'தாரை தப்பட்டை'. சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாலா படத்துக்காக 10 கிலோ எடை குறைந்த வரலட்சுமி 08-13911

எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். சசிகுமார் தன் தாடியை எடுத்துவிட்டு தவில் வாசிக்க கற்றுக் கொண்டு வருகிறார். வரலட்சுமி கரகாட்டம் ஆட கற்றுக் கொண்டு வருகிறார். மற்ற நடிகர்களுக்காக தேர்வும், ஒத்திகையும் நடந்து வருகிறது. நம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல... வரலட்சுமி இந்த படத்திற்காக எடைக்குறைந்திருக்கிறார் என்பதுதான்.

போடா போடி படத்தில் அறிமுகமான வரலட்சுமி நல்ல உயரமும் அதற்கேற்ற எடையுமாய் இருந்தார். அந்த படத்திற்குப் பின் மதகஜராஜா படத்திலும் நடித்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் பாலா படத்தில் நடிக்கும் வரலட்சுமி தனது எடையை பத்து கிலோ வரை குறைத்திருக்கிறாராம்.

படத்திற்காக இரவும் பகலும் கரகாட்டம் பயின்றதோடு... உடல் எடையிலும் கவனம் எடுத்துக்கொண்டாராம் வரலட்சுமி. ஆனால் படத்தில் தனக்கு என்னவேடம் என்பது தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார்.

படப்பிடிப்புக்கு போனாதான் என்ன வேடம் என்பதே தெரியும். பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியிருக்கிறது. எனவே கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்கிறார் வரு.

நான் ஈ சுதீப் உடன் மாங்கியா கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமிக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் பாவாடை தாவணி போட்டு கிராமத்துப் பெண்ணாக நடித்தது புது அனுபவம் என்கிறார் வரலட்சுமி. அது தனக்கு சவாலாக இருந்தது என்கிறார். கன்னட திரை உலகம் ரொம்ப வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது என்று கூறும் வரலட்சுமி ஒரே படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன் என்கிறார்.

சசிகுமார் ஜோடியாக வரலட்சுமி நடிக்கும் தாரை தப்பட்டை படத்தின் கதை இதுதான் என்று கிசுகிசுக்கின்றன கோலிவுட் வட்டாரங்கள். பிரமாண குலத்தில் பிறந்த தவில் கலைஞர் சசிகுமாருக்கும், தாழ்ந்த குலத்தில் பிறந்த கரகாட்டக்காரி வரலட்சுமிக்கும் ஏற்படும் காதல்தான் கதையாம்.

சசிகுமார் குடும்பம் காதலுக்கு சம்மதித்து விடுமா? அவருக்கு பரதநாட்டியம் ஆடும் ஒரு பிராமண பெண்ணை மணம் பேசி முடிக்கிறார்கள். மிருதங்கத்தை விட தவில்தான் பெரிய இசை என்றும், பரதநாட்டியத்தைவிட கரகாட்டம்தான் நல்ல கலை என்றும் சசிகுமார் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் கதையாம்.

தினசரி, ரிகல்சல், பயிற்சி என இருவரையும் சக்கையாக பிழிகிறார் பாலா. இருவருமே சூட்டிங்கிற்கு தயாராகிவிட்டனர். இந்த மாதம் இறுதியில் சூட்டிங் என்கின்றார் நாயகி வரலட்சுமி. சீக்கிரம் கரகாட்டக்காரியை கண்ல காட்டுங்க பாலா.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!