கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் மீண்டும் தள்ளிவைப்பு.. 'தொழில்நுட்ப காரணங்களால்' தாமதமாம்..!!


avatar

சென்னை: தவிர்க்க முடியாத தொழில் நுட்ப காரணங்களால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியீடு மே 23-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி:

ஈராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிட் இந்திய திரையுலகில் ஒரு மாபெரும் சர்வதேச நிறுவனம். கோச்சடையான் திரைப்படத்தை ஒரு உயர் தொழில் நுட்பத்தில் வெகு விரைவில் திரைக்கு வருவதற்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீடியாஒன் க்ளோபல் லிமிட்டடுடன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

சவுந்தர்யாவின் டைரக்ஷனில் உருவாகிய இந்தத் திரைப்படம் மே 9 ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, இந்தப் படம் உலகில் பல நாடுகளில் 6000 ப்ரிண்டுகளுக்கு மேல் 2டி மற்றும் 3டியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய ரிலீஸ் செய்வதற்கு பல ப்ரிண்ட்கள் தயாராகும் நிலையில் சில தொழில் நுட்ப காரணங்களினால் கோச்சடையான் படம் மே 23 ம் தேதி ரிலீஸ் ஆவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

முழு மூச்சுடன் கோச்சடையான் குழுவினர் மிகுந்த ஆவலுடன் மே 9ஐ எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் தவிர்க்க முடியாத, எதிர்பார்க்காத சில தொழில் நுட்ப காரணங்களினாலும், படம் 2டி மற்றும் 3டியில் தயாராக வேண்டியதாலும் தேதியை மாற்றும் ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி என்று ஆறு இந்திய மொழிகளில் உலகமெங்கும் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கோச்சடையான் படத்தில் நீங்கள் பார்ப்பதற்கு ஒரு புதிய தொழில் நுட்பத்தை, மிக நுணுக்கமாக, 'சலனப் பதிவாக்கம்' என்னும் தொழில் நுட்பத்தில் எடுக்கப்படும் படமாகும்.

ரசிகர்களுடைய ஆரவாரம் பெரிய முறையில் ஆரம்பித்துள்ளது. இது வெகுவிரைவில் அவர்கள் மகிழ்ந்து ரசிப்பதற்காக திரையரங்குகளுக்கு இரண்டு வாரங்களில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது.

இப்படம் நம் சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்களிலும், தீபிகா படுகோண், சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா மற்றும் ருக்மணி நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட தயாரிப்பில் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவாக்கம் செய்துள்ளார்.

உலக அளவில் பெருமை வாய்ந்த பைன் உட் ஸ்டுடியோஸ், லண்டன் சென்ட்ராய்டு ஸ்டுடியோஸ், பல உயரிய தொழில் நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளனர். தென் இந்தியாவை சேர்ந்த வல்லுநர்களும், சீனாவைச் சேர்ந்த பல வல்லுநர்களும் இத்திரைப்படத்தில் வேலை செய்துள்ளனர்.

சர்வதேச புகழ்பெற்ற படங்களான வேர்ல்டு வார் - 2, பைரேட்ஸ் ஆப் கரீபியன், அயன்மேன் - 2, ஹாரிபாட்டர், பெவர்லி ஹில்ஸ் என்ற படங்களுக்கு வேலை செய்த ஸ்டுடியோ நம் கோச்சடையான் படத்துக்கு வேலை செய்துள்ளது.

மே 23 அன்று உலகமெங்கும் 2டி மற்றும் 3டி யில் மக்களை மகிழ்விக்க விரைந்து வருகிறார்,கோச்சடையான்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!