சாது ஹீரோ.. ரணகள வில்லன்... சாப விமோசனம்: இதுவா ரஜினியின் லிங்கா படக் கதை?


avatar

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் மூட நம்பிக்கையின் பெயரில் நடக்கும் வழிப்பறி - கொள்ளைகளைப் பகிரங்கப்படுத்தும் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் கதைப்படி, ஒரு ஊரில் பெரிய அணையின் பாலம் உள்ளது. அந்த வழியாகச் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழக்கிறார்கள். என்ன காரணம் என்று விசாரித்தால், அந்தப் பாலத்தைக் கட்டிய தொழிலாளிகளை ஊர் மக்கள் அவமதித்து விரட்டியதாகவும், அவர்களின் சாபமே மக்களைப் பழிவாங்குவதாகவும் தெரிய வருகிறது.

இந்த சாபத்தைப் போக்க, பாலத்தைக் கட்டியவர்களின் வாரிசு யாராவது கிடைத்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கத் துடிக்கிறார்கள். அப்போதுதான் பாலம் கட்டிய ஒரு தொழிலாளியின் மகனான ரஜினி கிடைக்கிறார். அவரை அழைத்து வந்து மன்னிப்பு கேட்டு, மரியாதை செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் அங்கு வருகிறார் இன்னொரு ரஜினி. இளமையும் துடிப்பும் வீரமும் மிக்க அந்த ரஜினி, மகா வில்லத்தனமானவர். போலீசிலிருந்து மறைந்து வாழும் இவர் அந்த பாலம் இருக்கும் ஊருக்கு வருகிறார். ஏற்கெனவே அங்கிருக்கும் சீனியர் ரஜினியுடன் நட்பாகிறார்.

இவர்தான் அந்த பாலத்தின் சாப ரகசியத்தைக் கண்டறிகிறார். அது சாபமா, சதியா என்பது திரையில் பார்க்க வேண்டிய சந்திரமுகி சமாச்சாரமாம்! -இது ஊடகங்களில் வந்துள்ள கதைதான். உண்மையா என்பதை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்தான் சொல்ல வேண்டும்!

கதைப்படி, அணைக் கட்டியவரின் வாரிசாக வரும் சீனியர் ரஜினிக்கு சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கிறார். முரட்டுக் காளையாக வரும் இளம் ரஜினிக்கு சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்.

படத்தில் ரஜினியின் நண்பராக வருகிறார் வடிவேலு. இளம் ரஜினிக்கு நண்பராக கிச்சா சுதீப் நடிக்கிறார். வில்லன் ஜெகபதி பாபு என்பதை ஏற்கெனவே கூறியிருந்தோம். பொங்கலுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!