தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் ‘காமசூத்ரா 3டி’ ஷெர்லின் சோப்ரா


avatar

சென்னை: தமிழ்ப்படங்களில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் காமசூத்ரா 3டி படப்புகழ் ஷெர்லின் சோப்ரா. இதுவரை நடித்தது 14 படங்கள் மட்டும் தான் என்றாலும், பிளே பாய் மற்றும் டுவிட்டரில் தனது ஆடைகளற்ற போட்டோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. அவரது காமசூத்ரா 3டி படம், கவர்ச்சி நடிப்பில் உலகளவில் மேலும் அவரை பிரபலப் படுத்தியது.

ந்நிலையில் அவரது மலையாளப் படமான 'பேட் கேர்ள்' பட புரோமோஷனுக்கு சமீபத்தில் சென்னை வந்திருந்த ஷெர்லின் சோப்ரா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தென்னிந்திய திரைப்பட் தயாரிப்பாளர்கள் மீது ஆழ்ந்த மரியாதை வைத்து உள்ளேன். நான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சென்னை ஐதராபாத். தயாரிப்பாளர்கள் மற்றும் டெக்னிசியனகள் மிகவும் திறமையானவர்கள்.

எனது நீண்ட நாள் ஆசை இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். அந்த ஆசை மிக விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்' என்றார். இவர் ஏற்கனவே தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 30 வயதாகும் ஷெர்லின் சோப்ரா ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். மிஸ் ஆந்திரா பட்டமும் பெற்றுள்ளார். மணிரத்னம் அடுத்து இயக்கவுள்ள தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஷெர்லின் சோப்ராவிடம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகார்ஜுனா, ஐஸ்வர்யாராய் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்க உள்ளதாகவும் ஏற்கனவே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!