கன்னடத்தில் பிஸியாகும் சரத் மகள் வரலட்சுமி!


avatar

கன்னடத்தில் ஹிட்டான சுதீப்பின் மானிக்யா படத்தில் நடித்ததன் மூலம், கன்னடப் படங்களில் பிஸியாகியுள்ளார் சரத்குமார் மகள் வரலட்சுமி. ‘போடா போடி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் வரலட்சுமி.

கன்னடத்தில் பிஸியாகும் சரத் மகள் வரலட்சுமி! 08-13910

இப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் இணைந்து ‘மதகஜராஜா' படத்தில் நடித்தார். அந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவராமலேயே உள்ளது. பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்துக்காக தன் உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம்மாகும் முயற்சியில் உள்ளாராம்.

இந்நிலையில், வரலட்சுமி கன்னட சினிமாவில் கால்பதித்துள்ளார். ‘நான் ஈ' புகழ் சுதீப் ஜோடியாக ‘மானிக்யா' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். கடந்த மே 1ம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்த வரலட்சுமிக்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அவர் மேலும் சில கன்னட படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில்தான் பெரிய பிரேக் கிடைக்கவில்லை... கன்னடத்தில் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பட வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு வருகிறாராம்.

தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘மிர்ச்சி' படத்தின் ரீமேக்தான் ‘மானிக்யா'. கன்னடத் திரையுலகில் அதிக பொருட்செவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்ற இந்த படம், சுதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் கர்நாடகாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!