கடத்தப்பட்ட மாணவிகளை செக்ஸ் தொழிலில் தள்ளுவோம்- போக்கோ ஹரம் தீவிரவாதிகள்


avatar

மைடுகுரி: நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை செக்ஸ் அடிமைகளுக்கு விற்போம் என்று போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கூறிவருகின்றனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்தி போராடி வருகிறது.

போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரியில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு நேற்றிரவு வேன், லாரி மற்றும் பஸ்களில் வந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள், காவலர்களுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை பலவந்தமாக வாகனங்களில் தூக்கிப் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றனர்.

மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை தீவிரமாக எதிர்த்து வரும் போக்கோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.

கடந்த மாதம் ஒரு பள்ளியின் விடுதிக்குள் புகுந்து மாணவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். மாணவிகளை கடத்தப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர்.

அரசு போதுமான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த கடத்தல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று சிபோக் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் சென்ற லாரிகளில் ஒன்று நடு வழியில் பழுதானதால் அதில் இருந்த மாணவிகளில் சிலர் மட்டும் பேருந்திலிருந்து இறக்கி, வேறொரு லாரியில் ஏற்றியப் பின்னர் பழுதான லாரியை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதேபோல், ஒரு வேனும் "பஞ்சர்" ஆகிப் போனதால், அதிலிருந்த மாணவிகளையும் மற்றொரு வாகனத்தில் ஏற்றியபோது, இருளில் தீவிரவாதிகளின் கண்களில் படாமல் புதர் மறைவில் பதுங்கியபடி சிபோக் நகரை வந்தடைந்த சில மாணவிகள் வாகனத்தின் உள்ளே தீவிரவாதிகள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கடத்திச் செல்லப்பட்ட தங்கள் மகள்களின் கதி என்னவானது எனப் பல பெற்றோர்கள் கண்ணீருடன் கதறிக் கொண்டிருந்தனர். தற்போது அந்த 200 மாணவிகளையும் செக்ஸ் அடிமைகளிடம் விற்கப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டியுளளது குறிப்பிடத்தக்கது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!