போலி நம்பர் ப்ளேட்: நடிகை இலியானா கைதாகி விடுதலை!


மும்பை: நடிகை இலியானா நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலையானார்.

தெலுங்கிலிருந்து மும்பை போன நடிகை இலியானா பாலிவுட்டில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் வருண் தவானுடன் மெய்ன் தேரா ஹீரோ படத்தில் நடிக்கிறார்.

போலி நம்பர் ப்ளேட்: நடிகை இலியானா கைதாகி விடுதலை!
இலியானா

இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக அவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.

நேற்று மும்பையில் படத்தின் விளம்பர வேலைக்காக அவர் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது காரை மடக்கிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அவர் பயணம் செய்த காரின் நம்பர் ப்ளேட்டில் இருந்த எண்கள் போலியானவை என்பதைக் கண்டுபிடித்த போலீசார், இலியானாவை கைது செய்தனர்.

இந்த செய்து பரபரவென மீடியாவில் பரவியது. ஆனால் பின்னர் உடனடியாக இலியானா விடுவிக்கப்பட்டார்.

இந்த செய்தி படத்துக்கு ஒரு நெகடிவ் பப்ளிசிட்டியாக அமைந்துவிட்டது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!