பொது இடத்தில் ஆண் ஒருவருடன் பூனம் பாண்டே ஜல்சா: விளம்பரத்திற்காகவா?


avatar

மும்பை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மும்பையில் பொது இடத்தில் ஆண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டுள்ளார். மாடலாக இருந்த பூனம் பாண்டேவை யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு நான் தான் பூனம் பாண்டே என்று இந்திய மக்களின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்தார்.

விளம்பரத்திற்காகவா?

இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றபோது நிர்வாண போஸ் கொடுத்து சிலரை அதிர்ச்சி அடைய வைத்தார். அவர் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு வருவதால் அவர் முழுதாக ஆடைகளை துறந்தது பலருக்கு அதிர்ச்சியாக இல்லை.

இப்படி அவ்வப்போது ஏதாவது ஒன்று செய்து விளம்பரம் தேடும் பூனம் கடந்த சனிக்கிழமை இரவு மும்பையில் பொது இடத்தில் ஆண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்து காவல் நிலையம் வரை சென்று வந்துள்ளார்.

பொது இடங்களில் அநாகரிகமாக நடக்கக் கூடாது என்று அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். விளம்பரம் தேட இந்த பூனம் என்ன கூத்தெல்லாம் செய்கிறார் பாருங்கள் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!