இந்தியாவில் ஸ்பைடர்மேன் புதிய சாதனை... 4 தினங்களில் ரூ 41.7 கோடி வசூல்


avatar

ஸ்பைடர்மேன் திரைப்படம் இந்தியாவில் நான்கு தினங்களில் ரூ 41.7 கோடி வசூலித்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

ஏற்கெனவே வெளியான ஸ்பைடர்மேன் படங்களை மீண்டும் புதிய வடிவில் வெளியிட்டு வருகிறது சோனி நிறுவனம். கடந்த ஆண்டு ஸ்பைடர்மேனின் முதல் பாகம் தி அமேஸிங் ஸ்பைடர்மேன் என்ற பெயரில் வெளியானது.

இந்த ஆண்டு அதன் அடுத்த பாகம் தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் படம் வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 1523 அரங்குகளில் ஸ்பைடர்மேன் வெளியானது. 3டி, 2டி, ஐமேக்ஸ் 3டி மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற தொழில்நுட்பம் கொண்ட திரையரங்குகளுக்கேற்ப படத்தை உருவாக்கியிருந்தனர்.

இந்தியாவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் மிக அதிக ஆரம்ப வசூல் பெற்ற நான்கு படங்களில் ஒன்றாக தி அமேஸிங் ஸ்பைடர்மேன் அமைந்துள்ளது.

இதுவரை மொத்தம் ரூ 41.7 கோடியை இந்தப் படம் வசூலித்திருப்பதாக சோனி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் கெர்சி தருவாலா தெரிவித்துள்ளார்.

வசூல் மட்டுமல்ல, வரவேற்பும் பாராட்டும் அமோகமாக உள்ளதாம் படத்துக்கு. இதுவரை வெளியான ஸ்பைடர்மேன் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்றும், 3டியில் மிகச் சிறப்பாக உருவாக்கியிருப்பதாக மக்கள் பாராட்டுவதாகவும் கெர்சி தருவாலா தெரிவித்தார்.

ஸ்பைடர்மேனின் அடுத்த பாகம் 2016-லும், அதற்கடுத்த பாகம் 2018-லும் வெளியாகும் என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!