ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக போராடுவேன்!- நடிகை செலீனா


avatar

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக போராடுவேன்!- நடிகை செலீனா 06-cel10

மும்பை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகப் போராடுவேன் என பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மிஸ் இந்தியாவான செலினா ஜெட்லி, ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இது தொடர்பாக ஒரு வீடியோ படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதற்கு லதா மங்கேஷ்கரின் ஒரு பாடலைப் பயன்படுத்தியுள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக போராடுவேன்!- நடிகை செலீனா

அதில் தனது ஆண் நண்பனை தன் வீட்டிற்கு அழைத்து வரும் ஒரு ஆண், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவனுடன் உறவு ஏற்படுத்தி கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அமைப்பில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவரான நவி பிள்ளை செலினாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மும்பையில் வெளியிடப்பட்ட செலினா தயாரித்துள்ள ஓரினச்சேர்க்கை தொடர்பான இரண்டரை நிமிட வீடியோ 1,45,000 பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால், உச்ச நீதி மன்றம் ஓரினச் சேர்க்கையை சட்ட விரோதம் எனக் கூறி தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!