ஹன்சிகாவின் தங்கையான 'ஆபிஸ்' மதுமிலா


avatar

சின்னத்திரையின் அழகு நடிகை மதுமிலாவிற்கு சினிமா வாய்ப்பு அதிகம் வருகின்றனவாம். அதில் செலக்டிவான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும்

மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமான மதுமிலா. விஜய் டிவியின் ஆபீஸ், தொடர் மூலம் இளசுகளிடம் லட்சுமியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தாயுமானவன், புதுயுகம் டிவியில் அக்னி பறவை போன்ற சீரியல்களில் நடித்து வரும் மதுமிலாவிற்கென்று தனி ரசிகர், ரசிகை வட்டமே இருக்கிறது.

சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் மதுமிலா கொஞ்சம் குறைத்துக் கொண்டு ஈவினிங் காலேஜில் சேர்ந்து முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கப்போகிறாராம்.

படிப்பும், நடிப்பும் என் இரு கண்கள் என்கிறார் மதுமிலா.

என்னதான் நடித்து புகழ்பெற்றாலும் நிரந்தரமானது கல்விதான் என்கிறார்.

முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. இந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போகிறேன்.

இதற்கென நேரம் ஒதுக்கி அதற்கு தகுந்தாற்போல சூட்டிங்கில் கலந்து கொள்வேன் என்கிறார்.

நிறைய சினிமா வாய்ப்புகளும் வருகிறது. இப்போதைக்கு பூஜை படத்தில் விஷாலுக்கு தங்கையாக நடிக்கிறார்.

ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவுக்கு தங்கையாகவும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் மதுமிலா.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!