புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் பேசப்போகும் கொரியன் சீரியல்கள்


avatar

தென்கொரியாவில் தயாராகும் சீரியல் மற்றும் சினிமாக்கள் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. கதையம்சம் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமையும் இளமையும் கலந்திருப்பதால், இந்த நாட்டின் சீரியல்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் முதல்முறையாக புதுயுகம் தொலைக்காட்சியில், ‘கே சீரிஸ்' வரிசையில் புகழ்பெற்ற கொரியன் படைப்புகள் வெளிவர உள்ளன.

புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் பேசப்போகும் கொரியன் சீரியல்கள்

'பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்', ‘ஐரிஸ்', ‘பிளேஃபுல் கிஸ்', ‘கிரேட்டஸ்ட் லவ்', பாஸ்தா' போன்ற உலகப்புகழ் பெற்ற சீரியல்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் வரிசையாக தமிழில் ஒளிபரப்பாக உள்ளன.

பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்

மே 12-ம் தேதி முதல் நம்பர் ஒன் தென்கொரிய படைப்பான ‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' மெகா தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாகிறது.

பள்ளி பருவ காதல்

ஒரு பள்ளியில் நடக்கும் காதல், பிரிவு, நட்பு, மோதல்களை உணர்வுபூர்வமாக நகைச்சுவையுடன் சொல்லும் இந்தத் தொடர் கார்ட்டூன் வடிவத்திலும் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது

பேரனுக்காக பள்ளி

இந்தத் தொடரில், தென்கொரியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர், தன்னுடைய பேரன் படிப்பதற்காக ஷின்க்வா ஹைஸ்கூலை பிரமாண்டமாக தொடங்குகிறார்.

நான்கு பையன்கள்

பெரும் பணக்காரர்கள் மட்டுமே படிக்கக்கூடிய அந்தப் பள்ளியில் ‘எஃப் 4' கும்பலைச் சேர்ந்த நான்கு பையன்கள் ஏகப்பிரபலம். அவர்களிடம் நட்பு கொள்வதற்கு அத்தனை பெண்களும் ஏங்குகிறார்கள்.

குரூர தண்டனை

அதேநேரம் இந்த கும்பலை எதிர்ப்பவர்களுக்கு மிக குரூரமான தண்டனை கிடைக்கிறது. அதனால் இவர்களிடம் அனைவரும் விலகியே இருக்கிறார்கள்.

ஏழை சிறுமி

இந்த சூழலில் லாண்டரி கடை நடத்தும் ஏழைப் சிறுமி ஜான்ஸிக்கு இந்தப் பள்ளியில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப்பில் இடம் கிடைக்கிறது. அழகும் துணிச்சலும் நிறைந்த ஜான்ஸி நட்புக்காக எதையும் செய்யக்கூடியவள்.

தனியாக போராடும் கதாநாயகி

தன்னுடைய தோழிக்கு ஏற்படும் பிரச்னைக்காக ‘எஃப் 4' கும்பல் மாணவர்களை எதிர்த்து நிற்கிறாள். மாபெரும் பணக்கார மாணவர்களை எதிர்த்து தன்னந்தனியாக போராடுகிறாள் ஏழை ஜான்ஸி.

மோதலில் தொடங்கி காதல்

மோதலில் தொடங்கும் இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அதன்பிறகு ஜான்ஸியின் காதலைப் பிரிப்பதற்கான போராட்டத்தை நாயகனின் பெற்றோர் தொடங்குகிறார்கள்.

நகைச்சுவையும் காதலும்

பள்ளியில் தொடங்கும் இந்தப் போராட்டம், அவர்கள் கல்லூரியில் நுழைந்தபிறகு உச்சகட்ட மோதலை சந்திக்கிறது. மாணவர்களின் உலகத்தைக் காட்டும் இளமை துள்ளலுடன் சொல்லும் இந்தத் தொடரில் காதலும் நகைச்சுவையும் நிரம்பி வழிகிறது.

ஹாலிவுட் கதாநாயகி

ஹாலிவுட் படங்களிலும் ஏராளமான தொடர்களிலும் நடித்திருக்கும் நடிகை கூ கை சன், இந்தத் தொடரின் நாயகியாக நடித்திருக்கிறார்.

விருது பெற்ற சீரியல்

ஆசியன் டெலிவிஷன் அவார்டு உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும், ‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' தொடரை தினமும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

டப்பிங் சீரியல்கள்

இதுவரை இந்தி தொடர்கள்தான் டப்பிங் செய்யப்பட்டு வரிசை கட்டி தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முதன்முறையாக கொரியன் தொடர்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் பேச வரப்போகிறது. இனி வரிசையாக ஹாலிவுட் சீரியல்கள் தமிழ் பேசினாலும் ஆச்சரியமில்லை.

avatar

புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் பேசப்போகும் கொரியன் சீரியல்கள் 06-put10

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!