விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் எனக்கு நண்பர்களல்ல!- சந்தானம்


avatar

சென்னை: விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் போன்றவர்கள் என் நண்பர்கள் அல்ல... அண்ணன்கள் என்று கூறியுள்ளார் காமெடியனிலிருந்து ஹீரோவாக உயர்ந்துள்ள சந்தானம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் சந்தானம். அந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டி:

நீங்கள் நடித்த மற்ற படங்களின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வராத நீங்கள், இந்தப் படத்துக்கு மட்டும் வந்திருப்பது ஏன்?

என் படம் எப்படியும் வாரம் ஒரு முறை வருகிறது. அடிக்கடி நான் உங்களைச் சந்தித்துக் கொண்டே இருந்தால் சொன்னதையேதான் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். போரடித்துவிடும்.

கதாநாயகனாக ஹீரோயினுடன் டூயட் பாடி நடித்த அனுபவம் பற்றி...

டூயட்டெல்லாம் பாடல... டான்ஸ் ஆடியிருக்கிறேன். அதுவும் கனவுக் காட்சிகூட இல்லை. கதாநாயகனாக நடித்தது, ஒரு புது அனுபவம்தான். ஆரம்பத்தில் டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். பிறகு ‘காமெடியன்'. இப்ப ஹீரோ... நாளைக்கு.. டைரக்ஷனும் பண்ணலாம். செய்ற வேலையை திருப்தியா செய்யணும்...

கதாநாயகனாக நடிப்பது, காமெடியனாக நடிப்பது இரண்டில் எது கஷ்டமானது?

கதாநாயகனாக நடிப்பதுதான் கஷ்டமானது. காமெடியனா நடிக்கிறப்போ வசனத்தை மட்டும் கவனிச்சிக்கிட்டா போதும். கதாநாயகன்னா சண்டை போடணும், டான்ஸ் ஆடணும். ஹீரோவா நடிக்கிறது கஷ்டமான விஷயம்தான்.

கவுண்டமணி, வடிவேல், சந்தானம்... யார் சிறந்த காமெடி நடிகர்?

அதை நீங்கதான் சொல்லணும்...

உங்களுக்கு போட்டியா யாரை நினைக்கிறீங்க?

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. மக்களை சிரிக்க வைக்க கடுமையா உழைக்கிறேன். அப்படி உழைக்கிற வரை நான்தான் நம்பர் ஒன்.

இந்த வேலையை சரியா செய்யலேண்ணா என்னை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. எந்த ஹீரோவுக்கும் நான் போட்டியல்ல.

நீங்க ஹீரோவா நடிக்கிறதால மற்ற ஹீரோக்கள் உங்களை ஒதுக்கிறதா சொல்றாங்களே... உண்மையா? அதெல்லாம் இல்லை. இப்போதும் எல்லா ஹீரோக்களும் என்கூட ப்ரண்லியாதான் இருக்காங்க. சொல்லப்போனா, ஹீரோவா நடிக்கிறதுக்கு ஆர்யா, உதய நிதியெல்லாம் எனக்கு டிப்ஸ் கூட கொடுத்தாங்க!

விஜய், அஜீத், விக்ரம், சூர்யா... இந்த நால்வரில் உங்களோடு பெஸ்ட் நண்பர் யார்? இவங்க நான்கு பேருமே எனக்கு நண்பர்கள் அல்ல. அண்ணன்கள். அவங்களை அண்ணான்னுதான் நான் கூப்பிடுகிறேன்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!