நடிகர் ரித்திக்கும், மனைவி சூசனும் பிரிய இது தான் காரணமா?


avatar

மும்பை: விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், அவரது மனைவி சூசனும் பிரிய நடிகர் அர்ஜுன் ராம்பல் காரணம் என்று பாலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.

நடிகர் ரித்திக் ரோஷனும், அவரது காதல் மனைவி சூசனும் 13 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு ரிதான், ரிஹான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரித்திக்கும், சூசனும் விவாகரத்து கோரி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் பிரிவதற்கு இது தான் காரணங்கள் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. அவற்றை பார்ப்போம்.

ரித்திக்கின் பெற்றோர் மீது எரிச்சல் அடைந்த சூசன் கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் சூசனுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகிவிட்டதால் தான் அவர் ரித்திக்கை பிரிந்துவிட்டதாக ஒரு பேச்சு உள்ளது.

சூசனுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாகவும், அவர் பார்ட்டிகளில் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் பயன்படுத்தியதால் தான் ரித்திக் அவரை பிரிந்தார் என்றும் செய்திகள் வெளியாகின.

சூசன் பார்ட்டிகளில் போதைப் பொருளுடன், மதுவும் அருந்துவதால் தான் அவர் ஒல்லிக்குச்சியாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அவரின் இந்த பழக்கங்கள் ரித்திக் மற்றும் அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!