ரஜினிக்கு ட்விட்டர் மார்க்கெட்டிங் தலைவர் வரவேற்பு


சென்னை: இன்று ட்விட்டரில் இணைந்த ரஜினியை, அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் ரிஷி ஜெட்லி வரவேற்றுள்ளார்.

இணைய உலகில் நடக்கும் பல விஷயங்களையும் கவனித்து வந்த ரஜினி, இப்போது கோச்சடையான் வெளியீடு, லிங்கா தொடக்கம் என தான் பரபரப்பாக உள்ள நேரத்தில் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்..

அரசியல் கட்சிகளே இன்று சமூக வலைத் தளங்களைப் பிரதானமாக நம்பத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ரஜினி ட்விட்டருக்கு வந்ததை, அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் ரிஷி ஜெட்லி வரவேற்றுள்ளார்.

அவர் கூறுகையில், "ரஜினிகாந்த்தை ட்விட்டருக்கு மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த மேடையை அவர் பயன்படுத்திக் கொள்ள உதவுவதை நினைத்து மகிழ்கிறோம். எங்கள் மொபைல் சேவை மூலம் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள், பொது மக்களுடன் அவர் எப்போதும் நேரடித் தொடர்பிலிருப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இந்த ட்விட்டர் பக்கத்தை சிஏ மீடியா டிஜிட்டலின் ப்ளூயன்ஸ் நிறுவனம் நிர்வகிக்கும்.

தனது ட்விட்டர் பிரவேசம் குறித்து ரஜினி கூறுகையில், "எனக்கும் என் ரசிகர்களுக்குமான தொடர்பை மிகச் சரியான முறையில் நிர்வகிக்கும் ஒரு நிறுவனம் அமைந்திருப்பதாக நான் நம்புகிறேன். சோஷியல் மீடியாவில் இணைந்து, ரசிகர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கும் இருந்தது. ஆனால் ஏனோ இதுவரை அமையவில்லை. இன்று நடந்திருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!