ரஜினியைப் பின்தொடருது ட்விட்டர்.. சிலமணி நேரங்களில் 1.76 லட்சம் பேர்!


avatar

சென்னை: ட்விட்டருக்கு வந்ததை ரஜினி அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் 1.76 லட்சம் பேர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

ட்விட்டர் சரித்திரத்தில் யாருக்கும் இத்தனை வேகமாக பாலோயர்கள் குவிந்ததில்லை எனும் அளவுக்கு நிமிடத்துக்கு நிமிடம் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ரஜினிக்கு.

இந்த எண்ணிக்கை பெருகுவதைப் பார்ப்பதும், அதுகுறித்து ட்வீட் போடுவதுமே ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காகிவிட்டது பலருக்கும். ட்விட்டரில் பலரும் இதுபற்றித்தான் ட்விட் செய்தபடி உள்ளனர்.

இப்போ ரஜினியைப் பின்தொடருது ட்விட்டர்.. சிலமணி நேரங்களில் 1.76 லட்சம் பேர்!

நேற்று பிற்பகல்தான் ட்விட்டரில் இணைந்தார் ரஜினி. இதுபற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து ட்விட்டரில் இதுவரை இல்லாத வேகத்தில் அவரைப் பின்தொடர ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

இந்த வேகத்தைப் பார்த்து, 'இப்போது ரஜினியைப் பின் தொடருது ட்விட்டர்,' என்று ட்வீட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ட்விட்டர் பயன்படுத்தும் பெரும்பாலான பிரபலங்கள் ரஜினியைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அனைவரும் அவருக்கு வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், பிரேம்ஜி, நானி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகை ஹன்சிகா போன்றவர்கள்.. "ஹைய்யா தலைவர் ட்விட்டருக்கு வந்துட்டார்" என வரவேற்றுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான ரஜினியின் ரசிகர்கள், சினிமா தாண்டிய விஐபிகள் ஆகியோரும் ரஜினியை வரவேற்றுள்ளனர்.

16மணி நேரத்துக்குள் 1.76 லட்சம் பேர் ட்விட்டரில் இணைந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் செல்வாக்கைப் புரிய வைத்துள்ளது.

வட இந்திய பிரபலங்கள் பலரும் ரஜினியை ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

தன்னை வரவேற்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ள ரஜினி, அவர்களுக்கு தன் கையெழுத்திட்ட கோச்சடையான் டிஜிட்டல் போஸ்டரை அனுப்பி வைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று கோச்சடையான் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்துவது போலவும், அப்படத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் ரஜினியின் ட்விட்டர் வரவு அமைந்துள்ளதா மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

avatar

ரஜினியைப் பின்தொடருது ட்விட்டர்.. சிலமணி நேரங்களில் 1.76 லட்சம் பேர்! 06-twi10

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!