என் வழி... ரஜினி வழி! - இது ஆர்கேவின் ரூட்!


avatar

எல்லாம் அவன் செயல், அழகர் மலை, புலிவேசம், அவன் இவன் போன்ற படங்களைத் தந்த ஆர்கேவின் அடுத்த படம் என் வழி தனி வழி என தலைப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பாசறை நிறுவனம் சார்பில் தயாராகும் இந்தப் படத்தை ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். எல்லாம் அவன் செயல் என்ற பிரமாதமான படத்தைப் படைத்த வெற்றிக் கூட்டணி இது என்பதால், எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஆர்கேயின் வாழ்க்கையிலும் சரி, இந்தப் படத்திலும் சரி.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தாக்கம் அதிகம்.

என் வழி... ரஜினி வழி! - இது ஆர்கேவின் ரூட்! 06-13910

"ரஜினிகாந்தின் சுருக்கம்தான் ஆர் கே. அவரின் வெகு பிரபலமான வசனம்தான் என் வழி தனி வழி. இப்போது இந்த ஆர் கே, சூப்பர் ஸ்டாரான ஆர் கே வின் (ரஜினியின்) பிரபல வசனத்தை தனது படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறேன், அவரது ஆசியுடன்.. நம்ம வழி ரஜினி வழிதானே..," என்கிறார் படத்தின் நாயகன் ஆர்கே.

படத்தில் மிகப்பெரும் நடிகப் பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் ஆர் கே. டத்தோ ராதாரவி, விசு, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், இளவரசு, சம்பத், சீதா, ரோஜா மற்றும் காமடிக்கு விவேக் , பரோட்டா சூரி, ஹீரோயின்களாக பூனம் கவுர், தெனாலிராமன் புகழ் மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு முன் வக்கீல் கதாபாத்திரமேற்ற ஆர் கே இதில் போலீஸ் அதிகாரியின் பாத்திரமேற்கிறார். இந்தப் படத்தில் ஆர் கேவின் கதாபாத்திரம் போலீஸ் அதிகாரியாக வந்து என்னசெய்யப்போகிறது என்பதை புதுமையாக சட்ட ஆதாரத்தோடு படமாக்கியிருக்கிறாரியக்குனர் ஷாஜி கைலாஷ். "போலீஸ் அதிகாரிகளின் துயரத்தையும் அவர்கள் கடந்து வரும் பாதையும் அவர்களுக்கான விடிவையும் இந்த என் வழி தனி வழி பேசப்போகிறது," என்கிறார் ஆர் கே.

"போலீஸ் அதிகாரிகள் நெஞ்சை நிமிர்த்தி தங்கள் வீடுகளில் இப்படத்தை போட்டுக்காட்டலாம். அவர்களுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் படமாக இது அமையும்," என்கிறார் இதன் வசனகர்த்தா வி பிரபாகர். போக்கிரி படம் உட்பட பதினைந்து படங்களுக்கு எழுதிய பிரபாகர் என் வழி தனி வழி யின் வசனம் எழுதும் பணியைச் செய்துள்ளார்.

அட்லீனா கேத்ரீனா என்ற ரஷ்யன் மாடல் அந்தரத்திலே தொங்கிக்கொண்டு கயிற்றில் ஆடுவதில் உலக அளவில் புகழ் பெற்றவர். அவரை வைத்து ஒரு பாடல் படம்பிடிக்கப்பட்டுள்ளது. காமிராவை ராஜரத்தினம் கையாள, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். சூப்பர் சுப்பாராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். சென்னை, கேரளா, ஜோர்டான் ஆகிய இடங்களில் என் வழி தனி வழி மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

avatar

என் வழி... ரஜினி வழி! - இது ஆர்கேவின் ரூட்! 06-13911

avatar

என் வழி... ரஜினி வழி! - இது ஆர்கேவின் ரூட்! 06-13912

avatar

என் வழி... ரஜினி வழி! - இது ஆர்கேவின் ரூட்! 06-13913

avatar

என் வழி... ரஜினி வழி! - இது ஆர்கேவின் ரூட்! 06-13914

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!