போலி திருமண பப்ளிசிட்டி!


avatar

"ராஜா ராணி" படத்தின் பப்ளிசிட்டிக்காக போலியான மேரேஜ் இன்விடேஷன் வெளியிட்ட அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸை ஏகத்துக்கும் வறுத்தெடுத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

டைரக்டர் ஏ.ஆர்.முகதாஸ் தற்போது "ராஜா ராணி"என்ற படத்தை தயாரித்துவருகிறார். அவரது உதவியாளர் அட்லிகுமார் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக நயன்தாராவும் அவர்களுடன் ஜெய், நஸ்ரியா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

தனது தம்பியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த முந்தையபடமான "வத்திக்குச்சி" படம் பெரிய அளவில் ப்ளாப் ஆனதால் அடுத்த படமான இந்த ராஜா ராணிக்கு பலவிதமான விளம்பர உத்திகளை கையாண்டு ஹிட்டாக்க முயன்று வருகின்றனர். அதில் உச்சகட்டமாக கடந்த வாரத்தில் படத்தின் பப்ளிசிட்டி என்றபெயரில் படத்தின் ஹீரோ ஆர்யாவுக்கும், ஹீரோயின் நயன்தாராவுக்கும், திருமணம் நடக்கப் போவதாக போலியான இவிடேஷனை தயாரித்து எல்லா மீடியாக்களுக்கும் அனுப்பினர்.

அந்த இன்விடேஷனில் ‘ஆர்யா வெட்ஸ் நயன்தாரா’ என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில், ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும், இந்த தருணம் பல நாட்களாக எல்லோரும் எதிர்பார்த்தது தான்” என்றும் கூடுதல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட அது ஒரு நிஜமான திருமண அழைப்பிதழ் போலவே இருந்ததால் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் உண்மையிலேயே திருமணம் நடக்கப்போகிறது என்று நினைத்த பரபரப்பான தெலுங்கு மீடியாக்கள் அந்தச்செய்தியை நாள் முழுவதும் திரும்ப திரும்ப வெளியிட்டன.

இதனால் பரபரப்பான திரையுலகினர் பலரும் நயன்தாராவை தொடர்பு கொண்டு மேரேஜ் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த போலியான பப்ளிசிட்டி முதலில் நயன்தாராவின் பெர்மிஷனோடுதான் செய்யப்படுகிறது என்று ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அது பொய் என்றும், இந்த பப்ளிசிட்டிக்கு நயன்தாராவிடம் பெர்மிஷன் வாங்கவே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே இந்த போலி மேரேஜ் இன்விடேஷன் பப்ளிசிட்டி விவகாரம் தற்போது நயன்தாராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

அதிலும் சிலர் எங்களையெல்லாம் உங்க மேரேஜுக்கு கூப்பிட மாட்டீங்களா..? என்று கேட்க, டென்ஷனின் உச்சத்துக்குப் போன நயன் ஏ.ஆர்.முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு வறுத்தெடுத்து விட்டாராம். இதனால் பயந்து போன முருகதாஸ் படம் ரிலீஸாகும் வரை தொடர் பப்ளிசிட்டி உள்ளிட்ட வேலைகளுக்கு நயனின் தயவு தேவைப்படும் என்பதால் அவரை முழுமையாக சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!