நடிக்க மாட்டேன்: அடம் பிடித்த அஞ்சலி!


avatar

சென்னை: கால்ஷீட் குறித்து விவரம் கேட்க வந்த இயக்குநர் களஞ்சியத்தின் மானேஜரை சந்திக்க மறுத்து விட்டார் நடிகை அஞ்சலி.

பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு, கருங்காலி ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், களஞ்சியம். இவர் இப்போது, ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் அஞ்சலி திடீரென்று சென்றமாதம் வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அஞ்சலி நடிக்க வராததால் தனது படப்பிடிப்பு பாதிப்பட்டிருப்பதாக டைரக்டர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் களஞ்சியம் புகார் செய்தார்.

அஞ்சலி சில நாட்கள் ஹைதராபாத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் அவர், புனேயில் நடந்த ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சிங்கம்-2 படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடுவதற்காக, தூத்துக்குடி வந்தார் அஞ்சலி. அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.


அஞ்சலியின் கால்ஷீட் கேட்பதற்காக களஞ்சியத்தின் மானேஜர் சரவணன் தூத்துக்குடி சென்றார். மானேஜர் சரவணனை, அஞ்சலி சந்திக்க மறுத்து விட்டாராம். சரவணன் இங்கு இருந்தால், நான் நடிக்க மாட்டேன் என்று அஞ்சலி கூறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதாம். இதனைத் தொடர்ந்து, சிங்கம்-2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இதுபற்றி சரவணன் திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம், டைரக்டர்கள் சங்கம், பிலிம்சேம்பர் ஆகிய அமைப்புகளில் புகார் செய்து இருக்கிறார். இந்த புகார் தொடர்பாக, 3 அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றனவாம்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!