அஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!!


avatar

அஞ்சலி தமிழுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை... அவர் தெலுங்கிலேயே இருந்து கொள்ளட்டும்... ஆனால் நம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என தவிக்கிறார்களாம் தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும்.

காரணம், ஹைசதராபாத் போலீசாரிடம் தன்னை டார்ச்சர் செய்தவர்கள், தப்பாக அணுகியவர்கள் என பெரிய லிஸ்டையே கொடுத்திருக்கிறாராம் அஞ்சலி. இன்னும் சென்னைக்கு அஞ்சலி வரவில்லை. இங்கு வந்த பிறகு போலீசாரிடமும் நீதிமன்றத்திலும் அஞ்சலி வாக்குமூலம் தர வேண்டியிருக்கும்.

அப்படித் தந்தால் யார் யாரையெல்லாம் அவர் போட்டுக் கொடுப்பாரோ என திகிலில் உள்ளார்களாம். சித்தியும், 'கருங்காலி' இயக்குநரும் தன்னை எப்படியெல்லாம் படுத்தினார்கள் என்பதையும், வாய்ப்புகளுக்காகவும் பணத்துக்காகவும் அவர்கள் தன்னை நிர்ப்பந்தப் படுத்தியதையும் மீண்டும் ஒரு முறை சென்னை போலீசில் சொல்லிவிட அஞ்சலி முடிவு செய்திருக்கிறார்.

இதிலிருந்து அவரை திசை திருப்பவே சித்தியும் 'கருங்காலி'யும் வழக்கு, புகார் என பரபரப்பு கிளப்பி வருகிறார்களாம்!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!