சூது கவ்வும்- விமர்சனம்


avatar

[justify]
சூது கவ்வும்- விமர்சனம் 07-soo10

நடிகர்கள்: விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி
ஓளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: நளன் குமாரசாமி

தமிழ் சினிமா பார்க்காத கதைகளாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதிக்கும், அவரிடம் சொன்ன கதையை அப்படியே திரையில் வார்த்தெடுத்திருக்கும் புதிய இயக்குநர் நளன் குமாரசாமிக்கும் முதல் வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம். 'காமெடி என்பது அடுத்தவரைக் கலாய்ப்பதுவேயன்றி வேறில்லை' என்றாகிவிட்ட தமிழ் சினிமாவில், கதை வேறு காமெடி வேறல்ல என்பதை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் நளன்.

தனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன கடத்தல் வேலைகளைச் செய்து வருபவர் விஜய் சேதுபதி. அவருடன் 3 இளைஞர்களும் சேர்கிறார்கள். ஒருநாள் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்தும் அஸைன்மென்ட் வருகிறது. முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டு கடத்துகிறார்கள்.

அதில் ஒரு திருப்பமாக, கடத்தப்பட்ட அமைச்சர் மகனே இவர்களுடன் பங்காளியாகிறான். ஆனால் கடத்தல் வேன் விபத்துக்குள்ளாகிறது. கடத்தல் திட்டம் கவிழ்ந்துவிடுகிறது. இந்த கும்பலைப் பிடிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வருகிறார். அவர் துரத்த, இந்த கடத்தல் கும்பல் ஓட.. காமெடியும் விறுவிறுப்பும் கலந்து கட்டிய க்ளைமாக்ஸாக முடிகிறது.

விஜய் சேதுபதிக்கு இதில் 40 வயது 'இளைஞர்' வேடம் (நாற்பதுன்னா வயசாயிடுச்சின்னு அர்த்தமா என்ன...!). பிரமாதப்படுத்தியிருக்கிறார் மனிதர். ஹீரோயிசம் என்பதை வெளிப்படையாகக் காட்டாமல் ஹீரோயிசம் பண்ண வைத்துள்ளார்கள். அதைப் புரிந்து நடித்திருக்கிறார்.

குறிப்பாக அவரது உடல் மொழி. நானும் நடிக்க வருகிறேன் என களமிறங்கும் பிரபலங்களின் வாரிசுகள் விஜய் சேதுபதி

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!