சூர்யாவின் துருவ நட்சத்திரம் துவக்கம்


avatar

Dhruva Natchathiram Launched on 02.05.2013

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

சூர்யா, கௌதம் மேனன் முதன் முதலாக சேர்ந்த காக்க காக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர்கள் வாரணம் ஆயிரம் படத்தில் சேர்ந்து பணியாற்றினர். தற்போது துருவ நட்சத்திரத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

துருவ நட்சத்திரத்தின் துவக்க விழா சென்னையில் உள்ள கௌதம் மேனனின் போட்டான் கதாஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு துவங்கிய விழாவில் சூர்யா, பார்த்திபன், இயக்குனர்கள் ராம், பிரேம் சாய், விக்னேஷ், எழுத்தாளர் சாரு நிவேதா, மதன் கார்க்கி, வசந்த பவன் ரவி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சூர்யா சிங்கம் 2 படப்பிடிப்பில் இருந்து ஒரு நாள் லீவு எடுத்துவிட்டு இங்கு வந்தார்.

சூர்யா, கௌதம் மேனன்:
துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன் தயாரித்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீரா ரெட்டி:
துருவ நட்சத்திரத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியை கௌதம் மேனன் தேர்வு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரஹ்மான் இசை:
ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார்.

சீரியல் கில்லர் சூர்யா:
படத்தில் சூர்யா சீரியல் கில்லராக வருகிறாராம். அவரது பெயர் கே. 11 பேரை கொன்றுவிட்டு 12வது நபரை தேடி அலைவாராம்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!